களத்தில் அத்துமீறிய ரசிகர்கள்- விராட் கோலி கொந்தளித்த வீடியோ வைரல்!

  இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ள நிலையில், பயிற்சிப் போட்டியின்போது பார்வையாளர்களுடன் விராட் கோலி வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Jun 27, 2022, 12:19 PM IST
  • இந்தியா- இங்கிலாந்து இடையே கிரிக்கெட் தொடர்
  • இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது
  • பயிற்சிப் போட்டியின்போது ரசிகர்களுடன் விராட் கோலி வாக்குவாதம்
களத்தில் அத்துமீறிய ரசிகர்கள்- விராட் கோலி கொந்தளித்த வீடியோ வைரல்! title=

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது. கொரோனாவால் பாதியில் நின்றுபோன டெஸ்ட் தொடரை அங்கே மீண்டும் தொடரவுள்ளது.

அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 1ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கு நடுவே போட்டிக்கு வீரர்கள் தயாராகும் விதமாக பயிற்சிப் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டது. அதன்படி, லீசெஸ்டர்ஷயர் கவுன்டி அணிக்கு எதிரான 4 நாள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடியது.

அந்தப் போட்டியின்போது இந்தியாவைச் சேர்ந்தவரும் ஐபிஎல்லில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியைச் சேர்ந்த பந்துவீச்சாளருமான கமலேஷ் நாகர்கோட்டி களத்தில் நின்றுள்ளார். அப்போது போட்டியைக் கண்டுகளித்துக் கொண்டிருந்த ரசிகர்கள் சிலர், நாகர்கோட்டியிடம் போட்டோ எடுத்துக்கொள்ள அணுகியபோது அதற்கு அவர் மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் சிலர் அவரை வசைபாடியதாகக் கூறப்படுகிறது. நடந்த சம்பவங்களை எல்லாம் பெவிலியனில் நின்று கவனித்துக் கொண்டிருந்த விராட் கோலிக்கு கோபம் தலைக்கேறியுள்ளது. உடனே வசைபாடிய ரசிகர்களை கடிந்துள்ளார் விராட் கோலி.

மேலும் படிக்க | அடித்து நொறுக்கிவரும் DK! - ICC ரேட்டிங்கில் என்ன இடம் தெரியுமா?

நாகர்கோட்டி இங்கே வந்தது விளையாடுவதற்குத்தானே தவிர உங்களுடன் நின்று போட்டு எடுத்துக்கொள்ள அல்ல எனவும் விராட் கோலி அதிரடியாகக் கூறி ஷாக் ஆக்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

சர்வதேச போட்டிகள் ஆனாலும் சரி ஐபிஎல் ஆனாலும் சரி, நியாயம் இருப்பின் தனது அணி வீரர்களை விராட் கோலி ஒருபோதும் விட்டுக்கொடுப்பதே இல்லை. அதற்கான மற்றொரு சாட்சியாக மாறி இருக்கிறது இந்தச் சம்பவம்!

மேலும் படிக்க | ஜோ ரூட்டைப் போல கிரவுண்டில் பேட்டை நிறுத்தும் விராட் கோலி! - வைரல் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News