விஜய் ஆண்டனியின் புரியாத பாடல்களை புதுவிதமாய் பட்டியலிட்ட ரசிகர்!
விஜய் ஆண்டனி `நான்` திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து தன்னை ஒரு வெற்றி நாயகனாக நிலைநிறுத்திக் கொண்டார்.
விஜய் ஆண்டனி இந்திய திரையுலகின் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறன் கொண்டு தமிழ் திரையுலகில் சிறப்பாக பணியாற்றி வருபவர். திரை துறையில் ஒலி பொறியாளராக இருந்து பின்னர் இசைமைப்பாளராக தனது பணியை தொடங்கி, தற்போது நடிகராகவும் உயர்ந்துள்ளார்.
ALSO READ டைடில் மட்டும் 'வலிமை' அல்ல! அஜித் சாரும் தான் - புகழாரம் சூட்டும் கார்த்திகேயன்!
இவர் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளார். இவர் திரைப்படங்களுக்கு இசையமைப்பதற்கு முன்னர் தொலைக்காட்சி தொடர்களுக்கு இசையமைத்து வந்தார். விஜய் ஆண்டனி இசையமைத்த முதல் தொடர் சன் டிவியில் ஒளிபரப்பான "சின்ன பாப்பா பெரிய பாப்பா" .இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த "கனா காணும் காலங்கள்" மற்றும் "காதலிக்க நேரமில்லை" போன்ற தொடர்களுக்கு இசையமைத்தார் .
விஜய் ஆண்டனி "நான்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து தன்னை ஒரு வெற்றி நாயகனாக நிலைநிறுத்திக் கொண்டார். மேலும் இவர் நடிப்பில் வெளியான 'பிச்சைக்காரன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்தப்படம் கொண்டாடப்பட்டது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான "கோடியில் ஒருவன் திரைப்படம்" மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் 'மழைக்கு பிடிக்காத மனிதன்' என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி நாயகனாக மாறிய பிறகு அவருக்கே உரித்தான பிரத்தியேக வார்த்தைகளில் அவரது இசையில் வரும் பாடல்களை மிஸ் செய்வதாக ரசிகர்கள் பலரும் கூறி வந்தனர்.
இந்நிலையில் விஜய் ஆண்டனியின் ரசிகர் ஒருவர் அவருக்கே உரிய ஜிப்ரிஸ்(gibberish ) வார்த்தைகளில் வெளியான இருபத்திநான்கு பாடல்களையும் அவற்றின் கால அளவையும் குறிக்கும் விதமாக உணவகங்களில் வழங்கப்படும் பில் போல வடிவமைத்து பட்டியலிட்டுள்ளார். ஆனால் பட்டியலிட்டவர் குறித்த விவரம் தெரியவில்லை. இதனை விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ,"எனக்கே அவர பாக்கணும் போல இருக்கு" என்று கேப்ஷனுடன் பதிவிட்டிருப்பது இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
ALSO READ லிவ்விங் ரிலேஷன்ஷிப் எனக்கு ஓகே, ஆனால்! - ரைஸா வில்சனின் பதில்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR