லிவ்விங் ரிலேஷன்ஷிப் எனக்கு ஓகே, ஆனால்! - ரைஸா வில்சனின் பதில்

லிவ்விங் டூ கெதர் ரிலேன்ஷிப்பில் இருக்க எனக்கு ஒகே தான். ஆனால் இருப்பதற்கு எனக்கு ஒரு காதலன் வேண்டுமே"என்று கூறியுள்ளார் ரைஸா வில்சன்.

Written by - ZEE Bureau | Last Updated : Nov 13, 2021, 03:42 PM IST
லிவ்விங் ரிலேஷன்ஷிப் எனக்கு ஓகே, ஆனால்! - ரைஸா வில்சனின் பதில்

ரைஸா வில்சன் மாடல் நடிகையான இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசனால் நடத்தப்பட்ட  'பிக்பாஸ்-1' நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.  இவர் முதலில் வேலையில்லாத பட்டதாரி-2 வில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் 63 நாட்களுக்கு பிறகு வெளியேறிய இவர் முதன் முதலாக கதாநாயகியாக, சக போட்டியாளர் மற்றும் நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து 'பியார் பிரேமா காதல்' படத்தில் நடித்தார். 

ALSO READ இனி Youtube-ல் வீடியோவிற்கு Dislike செய்ய முடியாதா?

தற்போது ஜி.வி.பிரகாஷ்ஷுடன் இணைந்து “காதலிக்க யாருமில்லை“, நடிகர் விஷ்ணு விஷாலுடன் “எஃப்ஐஆர்“, நடிகர் பிரபுதேவாவுடன் “பொய்க்கால் குதிரை”, “திசேஸ்“ போன்ற திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.  படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்டிவாக இருப்பார்.அவ்வப்போது விதவிதமான கெட்டப்பில் போட்டோஷூட்களை நடத்தி அந்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு லைக்ஸுகளை அள்ளிக்குவிப்பார்.சமீபத்தில் கூட இவருக்கு தோல் சிகிச்சை தவறாக மாறி அதன் விளைவாக முகம் வீங்கி சர்ச்சையானது.அதனை கண்ட நெட்டிசன்கள் சிலர் ரைஸாவின் முகம் ஒரு சைஸாக மாறிவிட்டது என்று கிண்டலிடத்தனர். 

raiza

மேலும் சமூக வலைத்தளத்தில் அவருடன் லைவ் சாட்டில் ஒரு ரசிகர் உங்களின் பிகினி படத்தை அனுப்புங்கள் என்று கேட்டதற்கு சிறிதும் ஆரவாரமில்லாமல் நகைச்சுவையான ஒரு படத்தை அனுப்பி பதிலடி கொடுத்தார்.அந்த வகையில் மீதும் ஒரு ரசிகர் லைவ் சாட்டில் லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை முறையை வாழ உங்களுக்கு விருப்பமா ? என்று கேள்வி எழுப்பினார் .  ரசிகரின் இந்த கேள்விக்கு பதிலளித்த ரைஸா,“லிவ்விங் டூ கெதர் ரிலேன்ஷிப்பில் இருக்க எனக்கு ஒகே தான். ஆனால் இருப்பதற்கு எனக்கு ஒரு காதலன் வேண்டுமே"என்று கூறியுள்ளார்.

ALSO READ ஜெய்பீம் திரைப்படத்தை பாராட்டிய கேரள முன்னாள் அமைச்சர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News