நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம்: வெடித்தது அடுத்த சர்ச்சை!
நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 9ஆம் தேதி நடந்த நிலையில் இத்திருமணம் தொடர்பாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 9 ஆம் தேதி நடந்தது. மாமல்லபுரத்தில் நடந்த இந்தப் பிரம்மாண்ட திருமணத்தில் திரையுலகினர் பலர் கலந்துகொண்டனர்.
திருமண நிகழ்வுகளைப் படம்பிடிக்கும் உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றதால் இத்திருமணத்துக்கு செய்தியாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டதுடன் திருமணம் நடந்த இடத்தைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது.
திருமணம் முடிந்த கையோடு, இந்த ஜோடி திருப்பதிக்குச் சென்று சாமி தரிசனம் செய்தது. அங்கே புகைப்படக் கலைஞர்களைக் கொண்டு புகைப்படங்களும் எடுக்கப்பட்டன. இதனிடையே திருப்பதி கோவிலில் காலணி அணிந்திருந்த விவகாரம் பெருத்த சர்ச்சை ஆனது. இதையடுத்து விக்னேஷ் சிவன் இதற்காக மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில் இவர்களது திருமணம் தொடர்பாக புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. அதாவது, சமூக ஆர்வலர் ஒருவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளாராம். அதில் திருமணத்தைக் காரணம் காட்டிப் பொது இடமான கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படாதது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
மேலும் படிக்க | எதிர்பார்ப்பை எகிறவைக்கும் விஜய்- 66 படத்தின் டைட்டில் இதுவா?!
இந்த புகாரை ஏற்றுக் கொண்டுள்ள மனித உரிமைகள் ஆணையம், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவுள்ளதாம். மேலும் இது தொடர்பாக நடிகை நயன்தாரா- இயக்குநர் விக்னேஷ் சிவன் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR