தனது 53-வது பிறந்தநாளைக் இன்று கொண்டாடுகிறார் பிரபல நடிகர் அமீர் கான். இதனையொட்டி, ரசிகர்களின் விருந்தாக அவர் இன்று இன்ஸ்டகிராம் சமூகவலைத்தளத்தில் இணைந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட்டில் மட்டுமல்லாமல், இந்திய அளவில் ஒரு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தைத் தன் பின்னால் வைத்திருக்கும் ஒரு நடிகர், 'மிஸ்டர்.பெர்ஃபெக்ட்' என்று கூறப்படும் அமீர்கான். கடந்த 27 ஆண்டுகளாக சினிமாவில் நடித்துவருகிறார்.


இந்நிலையில், தனது 53-வது பிறந்தநாளைக் நடிகர் அமீர்கான் இன்று கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளையொட்டி ரசிகர்களின் விருந்தாக இன்று இன்ஸ்டகிராம் சமூகவலைத்தளத்தில் இணைந்துள்ளார்.


அதில் அவர், முதல் பதிவாகத் தனது தாயின் புகைப்படத்தை வெளியிட்டு, இன்று நான் இவ்வாறு இருப்பதற்கு முக்கியக் காரணம் என்று உருக்கமாக எழுதியுள்ளார்.


கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியானது அமீர் கான் நடப்பில் உருவான 'டங்கல்' திரைப்படம். பல்வேறு மொழிகளில் வெளியான இந்தப் படம், ரிலீஸான அத்தனை மொழிகளிலும் வசூல் சாதனை புரிந்தது. 


இதையடுத்து, சில மாதங்களுக்கு முன்னர் சீனாவில் வெளியான டங்கல், யாரும் எதிர்பாராத வகையில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியது. இதையடுத்து, டங்கல் திரைப்படம் ஹாங்காங்கில் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியிடப்பட்டது. 



ஹாங்காங்கிலும் டங்கல் படம் வெளியான ஒரு வாரத்துக்குள்ளேயே 6 மில்லியன் ஹாங்காங் டாலர்களை வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் இருக்கும். பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனை எல்லாம் டங்கல் முறியடித்துள்ளது. அடுத்ததாக, 'தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்' (Thugs of Hindustan) என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் நடிகர் அமீர்கான் என்பது குறிப்பிடத்தக்கது.