வலிமை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித்தின் 61ஆவது படத்தையும் ஹெச்.வினோத் இயக்கிவருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்புகள் நடந்துவருகின்றன. அஜித், கல்லூரிப் பேராசிரியராக நடிக்கும் இப்படத்தின் திரைக்கதை, வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாம். விரைவாக படமாக்கப்பட்டு இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


                                  


இப்படத்தில் நடிக்கவுள்ள பிற முக்கிய நடிகர்- நடிகைகள் பற்றிய விபரம் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியாகவில்லை. இதில் அஜித் இருவிதமான தோற்றத்தில் தோன்றவுள்ளதாகவும் அதில் ஒன்றில் எடை குறைந்து தோன்றவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், நடிகர் அஜித் உடல் எடை சற்று குறைந்த நிலையில் காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்போது வைரல் ஆகிவருகிறது.


மேலும் படிக்க | ராஜமெளலி படத்தில் நடிப்பவர்களைத் துரத்தும் வித்யாசமான சோகம்!


                                                          


சில வாரங்களுக்கு முன் கேரளா சென்ற அஜித், எடை குறைக்க ஆயுர்வேத சிகிச்சை தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படத்தையடுத்து உருவாகவுள்ள அவரது 62ஆவது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.


மேலும் படிக்க | ‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசனுக்கு ஷான்வி ஜோடியானது எப்படி?!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR