நடிகரான அஜித்குமார், பிரபல பைக் ரைடராகவும் அறியப்படுபவர். பைக் ரேஸில் காதல் கொண்ட அவரின் இந்த உலகப் பயணத்தில்,  5 க்கும் மேற்பட்ட அனுபவம் வாய்ந்த ரைடர்களும் செல்லவிருப்பதாக தெரிகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஜித்தின் இந்த உலக சுற்றுப்பயணத்திற்கு BMW நிறுவனம் ஆதரவை வழங்குகிறது. பி.எம்.டபிள்யூ நிறுவனம்,  பைக்குகளை வழங்குவதோடு, இந்த சுற்றுப்பயணத்தில் பயன்படுத்தப்படும் பைக்குகளுக்கான பராமரிப்பு ஆதரவை எல்லா இடங்களிலும் வழங்கும் என்றும் தெரிகிறது.


பைக்கில் உலக சுற்றுப்பயணத்தை தொடங்கும் தல அஜித்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தொழில்முறை பந்தய வீரராகவும் இருந்திருக்கும் நடிகர் அஜித் ஏற்பகனவே பைக் மூலம் உலக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  



அண்மையில் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பைக்கில் சென்று வந்த அஜித்தின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. பந்தய சீருடையில் ஹெல்மெட் அணிந்திருக்கும் அஜித்,  ஸ்போர்ட்ஸ் பைக் BMW R 1200GS இல் அமர்ந்திருப்பார். அந்த பைக்கின் விலை சுமார் 25 லட்சம்.


உலகப் புகழ்பெற்ற பெண் பைக்கரான மரால் யாசர்லூவை சமீபத்தில் சந்தித்த அஜித், அவரது அனுபவங்களைப் பற்றி தெரிந்துக் கொண்டதுடன், தனது உலக சுற்றுப்பயணங்கள் தொடர்பாகவும் அவருடன் கலந்தாலோசித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



தல அஜித்தின் வலிமை திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தனக்கு எந்தவொரு அடைமொழியும் வேண்டாம் என்று நேற்று அஜித் அறிவித்துள்ளார். தனது பெயரான அஜித்குமார் அல்லது அஜித் அல்லது ஏ.கே என்று மட்டும் குறிப்பிட்டால் போதும், தல (Thala Ajith) என்ற அடைமொழியை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது நேற்றையை வைரல் செய்தியாக இருந்தது.


இதற்கு முன்னதாக, அல்டிமேட் ஸ்டார் என்று அஜித்துக்கு பட்டப்பெயர் இருந்தது. ஒரு கட்டத்தில் அந்தப் பட்டப்பெயரை பயன்படுத்தவேண்டாம் என்று அஜித் கேட்டுக் கொண்டதை அடுத்து அந்த பெயரும் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், பைக்கர், ரேஸர் என்ற பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று அஜித்குமார் ஒருபோதும் சொல்லமாட்டார் என்பதை நிச்சயமாக சொல்லலாம்.


ALSO READ | என்னை தல-னு கூப்டாதீங்க- அஜித்  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR