கோட் சூட்.. கூலிங் கிளாஸ்..புது லுக்கில் மாஸாக அஜித்!- வைரல் வீடியோ உள்ளே!
நடிகர் அஜித் தனது 61 ஆவது படத்தில் பிசியாக நடித்துவரும் நிலையில் புதிய லுக்கில் அவர் தோன்றும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகிவருகிறது.
நடிகர் அஜித் தனது 61ஆவது படத்தில் பிசியாக நடித்துவருகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கிவரும் இப்படத்தில் கல்லூரிப் பேராசிரியராக அஜித் நடிக்கவுள்ளாராம்.
வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இப்படத்துக்காக தனது ஹேர் ஸ்டைல், உடல் எடை, முகத் தோற்றம் என பலவற்றையும் மாற்றியுள்ள அஜித் மாறுபட்ட லுக்கில் காட்சியளிக்கிறார்.
புதிய லுக்கில் தோன்றும் அவரது சில புகைப்படங்கள் கடந்த சில வாரங்களாகவே அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளன. இந்நிலையில் நடிகர் அஜித், ஏர்போர்ட் ஒன்றில் நடந்துவரும்போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
கூலிங் கிளாஸ், கோட் சூட், ஷார்ட் ஹேர் கட் சகிதம் நடிகர் அஜித் கலக்கலாக நடந்துவரும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. ஹெச்.வினோத் இயக்கும் அஜித்தின் 61 ஆவது படத்தைத் தொடர்ந்து 62ஆவது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.
நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ள இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR