ஹிந்தி படத்தில் நடிக்க விரும்புகிறேன் - அருண் விஜய்
ஹிந்தி படத்தில் நடிக்க விருப்பப்படுவதாக நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயகுமாரின் மகனும், நடிகருமான அருண் விஜய் ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்திருக்கிறார். ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படமானது ஜூலை 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
முதலில் ஜூன் 17ஆம் வெளியிடப்படவிருந்த இப்படம் ஏதோ காரணங்களால் தள்ளிப்போனது. ஆனால், விக்ரம் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாலேயே யானை ரிலீஸ் தள்ளிப்போனதாகவும் தகவல் வெளியானது.
மேலும் படிக்க | ‘சக்கு சக்கு வத்திக்குச்சி’... மன்சூர் அலிகானின் ரகளை நடனம் - வீடியோ
இதற்கிடையே படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.வழக்கமான ஹரி பட டெம்ப்ளேட்டில் ட்ரெய்லர் அமைந்திருந்தாலும் சிறிது வித்தியாசம் காட்டியிருக்கிறார் என்பதையும் உணர முடிந்தது. இந்தச் சூழலில் படம் இன்னும் 5 நாள்களில் வெளியாகவிருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்துள்ளன.
அந்தவகையில் யானை படத்தின் ஹீரோ அருண் விஜய் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரபாஸ் ஹீரோவாக நடித்த சாஹோ படத்தில் நான் இடம்பெற்றேன். எனது கேரக்டர் பாலிவுட் ரசிகர்களால் விரும்பப்பட்டது. பாலிவுட்டில் நடிப்பதற்கு விரும்புகிறேன்.
குறிப்பாக சஞ்சய் லீலா பன்சாலி, ராஜ்குமார் ஹிரானி, ரோகித் ஷெட்டி ஆகியோரின் இயக்கத்தில் நடிக்க எனக்கு மிகவும் விருப்பமாக உள்ளது. இவர்கள் இயக்கிய அனைத்து படங்களையும் நான் பார்த்துவிட்டேன்.
இந்த இயக்குநர்களிடம் சிறப்பான கதையம்சம் இருக்கிறது. அவர்களுடன் இணைந்து பணியாற்றினால் இன்னும் சிறப்பான படைப்புகளை இந்திய ரசிகர்களுக்காக அளிக்க முடியும்” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR