Daniel Balaji Death Latest News : ‘வேட்டையாடு விளையாடு’ படம் மூலம் சைக்கோ வில்லனாக தமிழ் மக்களால் அறியப்பட்டவர், டேனியல் பாலாஜி. இவர், கோலிவுட் திரையுலகின் சில முக்கிய நடிகர்களோடு அவர்களுக்கு வில்லனாக படங்களில் நடித்திருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாரடைப்பால் மரணம்..


நடிகர் டேனியல் பாலாஜி, நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது வயது 48. மறைந்த நடிகர் முரளியின் உறவினர் முறை (Cousin) தம்பியான இவர், ஆரம்ப காலக்கட்டங்களில் சீரியல்களில் நடித்து வந்தார். அப்படியே இவருக்கு தமிழ் படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து, கெளதம் வாசுதேவ் மேனன், வெற்றி மாறன் உள்ளிட்ட பெரிய பெரிய இயக்குநர்களின் படங்களிலும் நடித்தார். குறிப்பாக காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு மட்டும் தனித்துவமாக பார்க்கப்பட்டது. 


டேனியல் பாலாஜியின் மரண செய்தி, தமிழ் சினிமா மட்டுமன்றி ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திருக்கிறது. இதையடுத்து, நடிகர்கள் பலர் இவருக்கு இரங்கள் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டிருக்கின்றனர்.


கமல் ஹாசனின் பதிவு:


டேனியல் பாலாஜி, கமலுடன் வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்தார். இதையடுத்து, இவரது மறைவிற்கு கமல் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “இளவயது மரணங்களின் வேதனை பெரிது. பாலாஜியின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். 



மேலும், மறைந்த பின்பும் பாலாஜி வாழ்வார் என்றும் கமல் குறிப்பிட்டிருக்கிறார். 


அதர்வா பதிவு:


மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி, அதர்வாவின் சித்தப்பா ஆவார். இதையடுத்து, தனது சித்தப்பாவின் உடலுக்கு நடிகர் அதர்வா நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அது மட்டுமன்றி ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவினையும் வெளியிட்டிருக்கிறார்



“நாம் இருவரும் இன்னும் அதிகம் நேரத்தை ஒன்றாக செலவிட்டிருக்க வேண்டும் பாலாஜி சித்தப்பா..” என்று அவர் அப்பதிவினில் குறிப்பிட்டிருக்கிறார்.


மேலும் படிக்க | Daniel Balaji : இறந்த பின்பும் டேனியல் பாலாஜி செய்த நல்ல காரியம்..! என்ன தெரியுமா?


சூர்யா பதிவு:


நடிகர் சூர்யா, டேனியல் பாலாஜியின் மறைவுக்கு ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார். அதில், காக்க காக்க படத்தில் நடித்த அனுபவங்கள் தனக்கு நினைவிருப்பதாக கூறியிருக்கிறார்.



மேலும், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்வதாகவும் கூறியிருக்கிறார். 


ராதிகா சரத்குமார்:


ராதிகா சரத்குமார், சித்தி தொடரில் டேனியல் பாலாஜியுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். இதையடுத்து அவரும் டேனியல் பாலாஜிக்கு இரங்கல் தெரிவித்து ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார். 



அதில், “அருமையான மனிதர் அவர். அவரது மறைவு என்னை  துயரில் ஆழ்த்துகிறது.  அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று கூறியிருக்கிறார்.


மேலும் படிக்க | Daniel Balaji :தனது இறப்பை முன்கூட்டியே கணித்த டேனியல் பாலாஜி! என்ன சொன்னார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ