டேனியல் பாலாஜி கல்லூரி கால புகைப்படங்கள்

பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

நேற்று மாரடைப்பால் காலமான நடிகர் டேனியல் பாலாஜியின், கல்லூரி புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

1 /6

கோலிவுட் திரையுலகில் பயங்கர வில்லன் நடிகர்களுள் ஒருவராக இருந்தவர் டேனியல் பாலாஜி. கமல் ஹாசன், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்திருந்தார்.

2 /6

இவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 /6

டேனியல் பாலாஜிக்கு ‘டேனியல்’ என்ற பெயர் வந்ததற்கு காரணம், அவர் ‘சித்தி’ தொடரில் நடித்த அந்த கதாப்பாத்திரம்தான். இதையடுத்து தொடர்ந்து சில சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து வந்த இவர், அதன் பிறகு வில்லன் நடிகராக உருவானார்.

4 /6

வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பிகில், பைரவா என பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக மாறினார். தமிழை தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.

5 /6

இவரை பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், டேனியல் பாலாஜியின் கல்லூரி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

6 /6

இந்த புகைப்படத்தில் மிகவும் ஒல்லியாக, கழுத்தில் டை அணிந்து கொண்டு ஆளே அடையாளம் தெரியாமல் உள்ளார் டேனியல் பாலாஜி.