ஹாரி பாட்டர் ஹிரோவான டேனியல் ராட்க்ளிஃப் திருமணம் செய்யாமலே காதலியுடன் லிவ்வின் ரிலேசன்ஷிபில் இருந்து வந்த நிலையில் தற்போது குழந்தைக்கு தந்தையாக உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாயாஜாலம்,சாகசம் என 90ஸ் கிட்ஸ் மிகவும் ரசித்த கதைகளில் ஹாரி பாட்டர் முக்கியமான ஒன்று.ஹாரி பாட்டர் என்றவுடன்  மந்திரம் செய்யும் ஒரு குட்டி பையன் தான் நம் நினைவுக்கு வரும்.1997 ஆம் ஆண்டு JK ரௌலிங்கால் எழுதப்பட்டு  நாவலாக வெளியான ஹாரி பாட்டர் உலகம் முழுவதும் அமோக வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து முதன்முதலாக 2001 ஆம் ஆண்டு படமாக வெளியானது.


குழந்தை ஹாரி


”Harry Potter and the Philosopher's Stone” என்று பெயரிடப்பட்ட இந்த படத்தில் ஹாரி பாட்டர் கதாபாத்திரத்தில்  குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் தான் டேனியல் ராட்க்ளிஃப். அவர் இந்த படத்தில் நடிக்கும் போது அவரது வயது 11. தொடர்ந்து ஹாரி பாட்டரின் எட்டு பாகங்களிலும் இவரே ஹீரோவாக நடித்திருக்கிறார். 2001 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட இவர் 2011 ஆம் ஆண்டு  8 பாகங்கள் முடிவதற்குள் ஓர் இளைஞனாகவே வளர்ந்து விட்டார்.


ஐந்து வயது மூத்த நடிகையுடன் 10 ஆண்டுகள் லிவின் ரிலேசன்


இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு தன்னோடு 5 வயது அதிகமுடைய நடிகையான எரின் டிரேக்கை டேட் செய்ய ஆரம்பித்தார். இவர்களது காதல் "kill your darlings " என்ற படத்தில் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடிக்கும் போது  மலர்ந்தது.பின்னர் இருவரும் ஒன்றாக லிவிங் ரிலேஷன்ஷிப் முறையில் வாழ தொடங்கினார்கள். 


மேலும் படிக்க | சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் - திரைவிமர்சனம்!


தந்தையாகும் ஹாரிபாட்டர்


திருமணமே செய்து கொள்ளாமல் 10 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த டேனியல் ராட்க்ளிஃப்  எரின் டிரேக் ஜோடி சமீபத்தில் குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவை எடுத்து இருக்கிறார்கள். இந்நிலையில்  டேனியல் ராட்க்ளிஃப் காதலி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஹாரி பாட்டர் நடிகர் டேனியல் ராட்க்ளிஃப்க்கு தற்போது 33 வயதாகிறது  எரின் டிரேகுக்கு 38 வயதாகிறது.சமீபத்தில் எரின் டிரேக் பேபி பம்ப்புடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி மிகவும் வைரலானது. இந்நிலையில் இருவரும் பெற்றோராக போகும் செய்தி வெளியானதை அடுத்து இருவரது ரசிகர்களும் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குழந்தை பிறப்புக்கு முன்னதாகவே இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


மேலும் படிக்க | PS-2: பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் கைகோர்த்த ரெட் ஜயண்ட் மூவிஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ