தனுஷ் பாராட்டிய கந்தாரா... கேஜிஎஃப் 2-வை மிஞ்சியது - நாளை தமிழில்!
கடந்த மாத இறுதியில் வெளியான கன்னடா திரைப்படமான `கந்தாரா`, பல்வேறு தரப்பினருடன் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் திரை ரசிகர்கள் தமிழ் படங்கள் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் என பல மொழிப்படங்களிலும் அதிகம் நாட்டம் கொண்டவர்கள். சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் பல மொழிகள் படங்கள், திரையரங்களுகளில் வெளியாகி ஹிட் அடித்த சம்பவங்கள் இருக்கின்றன.
தற்போது, ஓடிடி பயன்பாட்டின் பெருக்கத்தால் பரவலாக பிற மொழித் திரைப்படங்களும் கவனம் பெறுகின்றன. இந்தி படங்கள் 70, 80 காலக்கட்டங்களில் இருந்து இங்கு ஓடிவரும் நிலையில், 'பிரேமம்', 'பாகுபலி', 'கேஜிஎஃப்' போன்ற படங்கள் மூலம் தென்னிந்திய திரைப்படங்கள் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன.
மேலும் படிக்க | பரங்கிமலை கொலை... அப்சல் குருவையும், சதீஷையும் கம்பேர் செய்தாரா விஜய் ஆண்டனி?
மேலும், அதனை தமிழில் ரீ-மேக் செய்வதை தாண்டி, டப்பிங் செய்து வெளியிடும் போக்கே அதிகரித்துள்ளது. அந்த வகையில், சமீபத்தில் 'கருட கமனா விருஷப வாகன' என்ற கன்னட திரைப்படம் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. அதை நடித்த ரிஷப் ஷெட்டியும் பரவலாக கவனத்தை பெற்றார்.
இந்நிலையில், கடந்த வாரம் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்த 'கந்தாரா' திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகி பெரும் வெற்றியடைந்துள்ளது. ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பட பிரபலங்களும் அத்திரைப்படத்தை பாராட்டி வந்தனர்.
இத்திரைப்படம் குறித்து நடிகர் தனுஷ் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில்,"கந்தாரா... அதிர வைக்கிறது... கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். ரிஷப் ஷெட்டி, நீங்கள் உங்களையே நினைத்து பெருமைக்கொள்ள வேண்டும். இப்படத்தை தயாரித்த ஹோம்பேல் பிலிம்ஸ்-க்கு வாழ்த்துகள். எல்லைகளை தொடர்ந்து தகர்த்தெறியுங்கள். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என வாழ்த்துகள்" என பதிவிட்டிருந்தார்.
'கேஜிஎஃப்', 'கேஜிஎஃப் 2' திரைப்படங்களை தயாரித்த ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனம்தான் கந்தாரா திரைப்படத்தையும் தயாரித்திருந்தது. அந்த வகையில், IMDb ரேட்டிங்கில், அதிக ரேட்டிங்கை பெற்ற திரைப்படங்களுள் கந்தாராவும் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து, 10க்கு 9.5 ஸ்டார்களை பெற்ற கந்தாரா, 'கேஜிஎஃப் 2' திரைப்படத்தின் ரேட்டிங்கை (8.4/10) தாண்டியுள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தையும் (8/10) மிஞ்சியுள்ளது.
கடந்த செப். 30ஆம் தேதி கன்னட மொழியில் வெளியான நிலையில், இன்று முதல் இந்தியிலும், நாளை முதல் தமிழ், தெலுங்கு மொழியிலும் வெளியிடப்படுகிறது.
மேலும் படிக்க | தன்னுடைய மறு முகத்தை தானே காட்டிய ரௌடி பேபி ஆயிஷா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ