Ilayaraja Biopic : திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர், தனுஷ். இவர், தனது கைவசம் பல படங்களை வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவரது 50வது படத்திற்கு ‘ராயன்’ என பெயர் வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படம் மட்டுமன்றி, இவர் நடிக்கும் இன்னொரு முக்கியமான படம் குறித்த தகவல்களும் சமீபத்தில் வெளியானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் :
ரசிகர்களால் ‘இசைஞானி’ என்று அழைக்கப்படும், இசை ஜாம்பவான், இளையராஜா. இவரது வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளதாக தககவல்கள் வெளியானது. இந்த படத்தில், இளையராஜா இந்தியாவிற்கே இசைஞானியாக வளர்ந்தது எப்படி என காண்பிக்க உள்ளனர். இதில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில், நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. 


இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றின் இயக்குநர் யார் ?
இதனிடையே இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குநர் அருண் மாத்தேஸ்வரன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம் பாலிவுட் இயக்குநர் ஆர்.பால்கி, தனக்கு இளையராஜாவின் கதையை இயக்க ஆர்வமுள்ளதாகவும் அவரது 50 ஆண்டுகால பயணத்தில் அவர் செய்த சாதனைகளை அந்த படத்தில் காண்பிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந் நிலையில், இந்த வாய்ப்பு அருண் மாத்தேஸ்வரனுக்கு சென்றுள்ளது. அதுமட்டுமின்றி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் சிம்பு ஏ.ஆர் ரஹ்மானாகவும், ரஜினி மற்றும் கமல் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Jyothirmayi: ‘தலைநகரம்’ பட நாயகியை நினைவிருக்கா? இப்போ எப்படி இருக்கார்னு பாருங்க..


இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம் :
இந்நிலையில் தற்போது இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க நடிக்க தனுஷ் வாங்கவுள்ள சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்க நடிகர் தனுஷ் ஐம்பது கோடி சம்பளம் கேட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் தயாரிப்பு நிறுவனமும் தனுஷ் கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. கூடிய விரைவில் இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


தனுஷின் அடுத்தடுத்த படங்கள் :
இதினிடையே தற்போது நடிகர் தனுஷ், “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற படத்தை இளம் நடிகர்களை வைத்து இயக்கியிருக்கிறார். இதையடுத்து தனது 50வது படமான ‘ராயன்’ படத்தையும் அவரே எழுதி இயக்கி இருக்கிறார். இது அவர் இயக்கும் மூன்றாவது படமாகும். இதையடுத்து, மாரி செல்வராஜ் இயக்கும் ஒரு படத்திலும் தனுஷ் நடிக்க இருக்கிறார். அடுத்து ‘ராஞ்சனா’ பட இயக்குநர் ஆனந்த் எல்.ராஜ் இயக்கும் ‘தேரி இஷ்க மெயின்’ என்ற படத்திலும் தனுஷ் நடிக்கிறார். 


மேலும் படிக்க | Manjummel Boys: தமிழகத்தில் சக்கைபோடு போடும் மஞ்சுமெல் பாய்ஸ்! இதுவரை செய்த வசூல் எவ்வளவு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ