Dhanush Tere Ishq Mein Movie Female Lead : தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக இருக்கும் தனுஷ், தற்போது தென்னிந்திய நடிகர் என்பதை தாண்டி பான் இந்திய நடிகராக வளர்ந்து விட்டார். ஹாலிவுட் அளவுக்கு வளர்ந்த இவர், தமிழ், தெலுங்கு, இந்தி என மாறி மாறி வெவ்வேறு மொழி படங்களின் நடித்து வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிஸியாக வளம் வரும் தனுஷ்:


தற்போது கோலிவுட் திரையுலகில் மிகவும் பிசியாக வலம் வரும் நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் கடைசியாக நடித்திருந்த கேப்டன் மின்னல் திரைப்படம் புதிய அளவில் ஏமாற்றத்தை கொடுத்ததை தொடர்ந்து, அடுத்த படத்தில் எப்படியாவது விட்டு இடத்தை பிடிக்க வேண்டும் என்று தீர்க்கம் காட்டி வருகிறார். 


இவர் நடிப்பில் ராயன் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இதனை இவரே எழுதி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பால முரளி, செல்வராகவன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இதன் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், படம் ஜூலை 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 


இளையராஜாவின் படத்தில்…


ரசிகர்களால் இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படம் உருவாக இருக்கிறது. இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இப்ப படத்தை கேப்டன் மில்லர் படைய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இதன், படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. 


இந்தி படத்தில் தனுஷ்: 


நடிகர் தனுஷ் கேப்டன் திரைப்படத்தில் நடித்ததை அடுத்து, இந்தி படம் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வரும் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதை எடுத்து அவர் நடித்திருக்கும் இன்னொரு இந்தி படம், ‘தேரே இஷ்கு மெயின்’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இருப்பது யார் தெரியுமா? 


மேலும் படிக்க | Dhanush : 40 வயதில் நடிகர் தனுஷிற்கு 2வது திருமணம்!? மணப்பெண் ‘இப்படி’ இருப்பாராம்..


அனிமல் பட நாயகி: 


கடந்த ஆண்டு வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் அனுமதி. ரன்பீர் கபூர் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்தார். இன்னொரு ஜோடியாக வந்தவர், ட்டிப்டி டிம்ரி. இவர் இதில், ரன்பீர் கபூரின் காதலியாக நடித்திருப்பார். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு ரசிகர் கூட்டம் அதிகமானதை தொடர்ந்து, பாலிவுட் படங்களின் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்திக் கொண்டே இவர், இப்போது தனுஷுக்கு ஜோடியாக ‘தேரே இஷ்கு மெயின்’ படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவர், பேட் நியூஸ் எனும் படத்தில் நிக்கி கௌஷலுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தற்போது பலருக்கு பிடித்த நாயகியாக இருப்பவரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 



படம் இயக்கும் தனுஷ்:


நடிகர் தனுஷ், ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ எனும் படத்தை எழுதி இயக்குகிறார். தன் படங்களை தானே இயக்கி நடித்து வந்த தனுஷ், முதன் முறையாக இப்படத்தை இயக்க மட்டும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் வரும் அனைத்து முக்கிய கதாப்பாத்திரத்தை சேர்ந்தவர்களும் இளைஞர்களாக இருப்பர் என கூறப்படுகிறது. குறிப்பாக, மலையாள நடிகரான மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், அனேகா சுரேந்திரன் உள்ளிட்ட பலர் இதில் நடிக்க இருக்கின்றனர். 


மேலும் படிக்க | அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் தனுஷ்.. கைவசம் பல படங்கள், சம்பளம் எவ்வளவு இருக்கும் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ