நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் அல்வா வாசு, கல்லீரல் நோயினால் நேற்று காலமானார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் அல்வா வாசு தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் கிட்டதட்ட சுமார் 1,000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். குறிப்பாக வடிவேலுடன் இணைந்து நடித்துள்ள இவரது நகைச்சுவை காட்சிகள் அனைவரையும் ரசிக்க வைக்கக் கூடியது. நடிகர் அல்வா வாசுவுக்கு கிருஷ்ண ஜெயந்திகா என்ற மகள் இருக்கிறார்.


நடிகர் அல்வா கல்லீரல் பாதிப்படைந்ததால், அவர் மதுரையில் உள்ள மீனாட்சி மி‌ஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் எந்தவித பலனும் ஏற்படுவதால், அவரை வீட்டிற்கு அழைத்து செல்லும் படி டாக்டர்கள் கூறிவிட்டனர். 


அவர் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு சில நாட்களுக்கு பிறகு உடல்நலம் மிகவும் மோசமானதால் நேற்று அவரது இல்லத்தில் அவர் காலமானார். 


இவர் இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.