நடிகர் ஹரீஷ் கல்யாண் பல ஆண்டுகளக தமிழ் சினிமாவில் இயங்கி வந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலம் ஆனார். அதைத் தொடர்ந்து, அவர் நடிப்பில் வெளிவந்த 'பியார் பிரேமா காதல்', 'இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும்', 'தாராள பிரபு' உள்ளிட்ட திரைப்படங்கள் பலத்த வரவேற்பை பெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து, அவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் எழுந்தது. குறிப்பாக, இளம்பெண்கள் மத்தியிலும் அவருக்கு கிரேஸ் அதிகமிருந்தது. இந்நிலையில், ஹரீஷ் கல்யாண் தனது திருமணம் குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டிருந்தார். அதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,"நர்மதா உதயக்குமார் உடனான எனது திருமணத்தை உங்களிடம் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க | மீண்டும் இணையும் தனுஷ் - ஐஸ்வர்யா! விவாகரத்துக்கு முற்று புள்ளி!



அதுமட்டுமின்றி, தொடர்ந்து, தனக்கு ஆதரவளித்து வரும் அன்பான ரசிகர்களுக்கு தனது தனிப்பட்ட வாழ்க்கையின் முக்கியமான பயணத்தின் தொடக்க உள்ள மகிழ்ச்சியான செய்தியாக இதை அவர் அறிவித்துள்ளார். மேலும், இந்த புதிய வாழ்க்கைப் பயணத்தை தொடங்கும் இந்த நேரத்தில், இப்போதும், எப்போதும் அனைவரிடம் இருந்தும் இரட்டிப்பு ஆசீர்வாதங்களையும், அன்பையும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். 


மேலும், தனது சமூக வலைதளப் பக்கத்தில், அவரின் வருங்கால மனைவி நர்மதா உடன் அவர் இருக்கும் புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.ஆனால், திருமண தேதியை அவர் அறிவிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, திரைப்பட நடிகர்கள், கலைஞர்கள், பிரபலங்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 



மறுபுறம், அவரின் உயிருக்குயிரான ரசிகைகள் சிலர், அவரின் திருமணச்செய்தியை கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அவரது ரசிகைகள் சமூக வலைதளங்களில் தங்களின் கண்ணீர் பதிவுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.  



ஹரிஷ் கல்யாண், நர்மதா ஆகியோர் கைக்கோர்த்து, அதை மட்டும் புகைப்படமாக பதிவிட்டிருந்தனர். அந்த புகைப்படத்திற்கு ரசிகை ஒருவர்,"மற்றொரு கை ஒரு பெண்ணின் கைப்போல் இல்லை. அந்த கையும் ஹரீஷ் கல்யாண் போன்றுதான் உள்ளது. ஏதும் புதிய படமா?" என நகைச்சுவையாக கருத்திட்டுள்ளார். ஹரீஷ் கல்யாண் தற்போது, டீசல் என்ற திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | ஆதிபுரூஷ் டீசர் ட்ரோல்களால் நொறுங்கிப்போனேன்; ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த இயக்குநர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ