நடிகர் கமல்ஹானை முதுகெலும்பில்லாத கோழை என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் கமல்ஹாசன் அரசியலை பற்றி தனது கருத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதைப்பற்றி சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் 4-ம் ஆண்டு நினைவு நாளில் கலந்துகொண்ட பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியது, 


முதல்வர் ஆசை கமல்ஹாசனுக்கு மட்டும் அல்ல. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. இதை மறுப்பதற்கு எனக்கு எந்த அதிகாரமும் கிடையாது. வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், கட்சி தொடங்கலாம். ஆனால் முதல்வர் ஆகுவதற்கு தகுதி வேண்டும். 


அப்படி பார்த்தால், விஸ்வரூபம் படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தபோது, உடனே அவர் நான் நாட்டை விட்டே செல்கிறேன் என்று கூறினார். நாட்டை விட்டு ஓடுபவர்கள் எப்படி நாட்டை ஆளுவார்கள். அவர் முதலமைச்சரானால் தமிழ்நாட்டின் கதி என்னவாகும். எனவே கமல்ஹாசன் ஒரு முதுகெலும்பற்ற கோழை என கடுமையாக எச்.ராஜா விமர்சித்தார்.