முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'விருமன்' படம் ஆகஸ்ட்-12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.  விருமன் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள சோழர்களின் பெருமையை பேசும் பொன்னியின் செல்வன் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.  இந்த படத்தில் கார்த்தி, வல்லவராயன் வந்தியத்தேவன் என்கிற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  பொன்னியின் செல்வன் நாவல் ரசிகர்களுக்கு வந்தியத்தேவன் மிகவும் பிடித்தமானதொரு கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி 'கைதி-2' படம் குறித்து பேசியுள்ளார்.  'கைதி-2 படத்தை அடுத்த ஆண்டில் தொடங்க திட்டமிட்டுள்ளோம், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய்யை வைத்து படமெடுத்து முடித்ததும், 'கைதி-2' படத்தை நாங்கள் தொடங்குவோம்' என்று கூறியுள்ளார்.  மேலும் பேசுகையில், நான் சமீபத்தில் லோகேஷை சந்தித்தேன், நான் சிவப்பாகிவிட்டதால் லோகேஷ் வருத்தத்தில் இருக்கிறார் என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.  ஏனெனில் அவரது கைதி படத்திலிருக்கும் டில்லி கதாபாத்திரம் இப்படி அழகான தோற்றத்தில் இருக்கமாட்டார், ஆனால் இந்த கார்த்தி அழகாக இருக்கிறார், டில்லி தோற்றத்தை அடைவது கடினம் என்று லோகேஷ் கூறியதாக கார்த்தி கூறியுள்ளார்.



மேலும் படிக்க | பாடலாசிரியர் சினேகன் மீது போலீசில் புகார் செய்த தமிழ் நடிகை!


'விக்ரம்' படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததிலிருந்து ரசிகர்கள் அனைவரும் கைதி படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ஆர்வமாக காத்திருக்கின்றனர்.  மேலும் இந்த படத்தில் சகோதரர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின், ரோலக்ஸ்-டில்லி கதாபாத்திரத்தை திரையில் ஒன்றாக காணலாம் என்கிற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.



மேலும் படிக்க | கார்த்தியின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவரா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ