கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் காந்தாரா. சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. பண்ணையாருக்கும் பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்னையை பண்பாட்டுக் கூறுகளுடன் பதிவு செய்யும் படமாக காந்தாரா வெளியாகியுள்ளது. இப்படத்தில் கிஷோர், சப்தமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படத்துக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரவேற்பை அடுத்து படத்தை  தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்திருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி காந்தாரா தமிழில் டப் செய்யப்பட்டும் இன்று வெளியானது. படத்தை பார்த்த தமிழ் ரசிகர்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி பிரமிப்பாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டும்வருகின்றனர். மேலும், நில அரசியலை அரசு நிர்வாகம், நிலச்சுவான்தார்கள், பழங்குடியின மக்கள் என முக்கோணத்தில் இணைத்து எழுதியிருக்கும் திரைக்கதையையும் பலர் பாராட்டிவருகின்றனர்.



இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் கார்த்தி ரிஷப் ஷெட்டியை நேரில் சந்தித்து பாராட்டினார். அப்போது, படம் மிகவும் அருமையாக இருந்ததாக தெரிவித்தார். மேலும் உடலெல்லாம் நடுங்கிவிட்டது எனவும் கூறினார். இதற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


மேலும் படிக்க | புது முல்லை வந்தாச்சு: பாண்டியன் ஸ்டோர்ஸ் ராசிக்காரர்கள் ஹேப்பி


முன்னதாக,  இந்திய சினிமாவில் அதிக ஐஎம்டிபி ரேட்டிங்கில் சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய்பீம்' திரைப்படம் இருந்தது. அதாவது, ஐஎம்டிபியில் 'ஜெய்பீம்' படத்தின் ரேட்டிங் 8.9. இந்திய சினிமாவில் அதிக ஐஎம்டிபி ரேட்டிங்காக இந்தப் படம் கருதப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக 'கேஜிஎஃப் 2' திரைப்படம் 8.4 ரேட்டிங்குடன் இரண்டாவது இடத்தில் பிடித்திருந்தது. அடுத்ததாக ராஜமௌலியின் 'ஆர்ஆர்ஆர்' 8 ரேட்டிங்கில் இருந்தது. ஆனால், இவை அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி 9.5 ஐஎம்டிபி ரேட்டிங்குடன் முதலிடம் பிடித்துள்ளது காந்தாரா திரைப்படம்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ