நடிகர் கார்த்தி கருத்து: தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் கார்த்தி. ஹீரோவாக அறிமுகமாகி பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகர் கார்த்தி. சமீபத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளியான பொன்னியின் செல்வன் உலகளவில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து நடிகர் கார்த்தி ஸ்டுயோ க்ரீன் தயாரிப்பில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தமிழக காவல்துறையினர் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்துக் கொண்டார். போதை பொருள் எதிராகவும் அதனால் வரும் பாதிப்புகள் குறித்தும் இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கார்த்தி அறிவுரை வழங்கினர். அந்தவகையில் இந்த விழாவில் நடிகர் கார்த்தி கூறியதாவது.,


மேலும் படிக்க | இந்த வாரம் இந்த 4 வெப் சீரிஸ்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!


”இன்றைய காலக்கட்டத்தில் போதைப்பொருள்கள் அதிக அளவில் புழங்கி வருகின்றன. இதனைப் பயன்படுத்தும் இளைஞர்களின் வயது வரம்பும் குறைந்துகொண்டே வருகிறது. முன்பெல்லாம் கல்லூரி படிக்கும் இளைஞர்கள் மது அருந்தினர். இப்போது பள்ளி மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டனர்.


பள்ளிகளுக்கு அருகே கூட போதைப்பொருட்கள் சகஜமாக விற்கப்படுகின்றன. போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் நம்மிடையே இருப்பவர்கள் தான். அதனை விற்பவரும் புழக்கத்தில் விடுபவரும் நம்மிடையே இருப்பவர்கள் தான். ஆக நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் போதைப்பொருட்களின் பயன்பாட்டை தடுக்க முடியும். மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.


மேலும் படிக்க | ஸ்டிக்கர் அரசியலில் விஜய்... புஸ்ஸி ஆனந்த் செயலால் கொந்தளிப்பு..! என்னப்பா இதெல்லாம்?


இது சீரியஸான விஷயம். போதைப்பொருட்களில் ஆர்வத்தை காட்டுவதற்கு பதிலாக இளைஞர்கள் விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்தை செலுத்த வேண்டும். பெற்றோர்கள் தான் இளைஞர்களின் நண்பனாக இருக்க வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் மகிழ்ச்சி, சோகம் என எல்லா தருணங்களிலும் பயன்படுத்துவதாக கூறுகின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகளை கவனித்து நண்பர்களாக வழிநடத்த வேண்டும்” என்று குறிப்பிட்டு பேசினார் நடிகர் கார்த்தி. தற்போது கார்த்தியின் அறிவுரை ரசிகர்களால் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


இதற்கிடையில் தற்போது ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள படம், ஜப்பான். இந்த படத்தில், நடிகை அனு இமானுவேல், நாயகியாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் கார்த்தியின் பெயர் ஜப்பான் என்பது சமீபத்தில் வெளியான இண்ட்ரோ வீடியோ மூலம் தெரிய வந்தது. காவல் துறை அதிகாரியாக, ஊர் சுற்றும் இளைஞராக, ஐ.டி.ஊழியராக இதுவரை கார்த்தியை பார்த்து வந்த ரசிகர்கள், இந்த படத்தில் அவரை வித்தியாசமான அவதாரத்தில் பார்க்க உள்ளனர். ஜப்பான் படம், ரவுடியாகவும் கொள்ளையனாகவும் வலம் வந்த ஒருவனின் கதையாக இருக்கும் என ரசிகர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக ஜப்பான் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.



மேலும் படிக்க | Leo Naa Ready: 'போஸ்டர் அடி... அண்ணன் ரெடி' - தம்பிகளுக்காக வருகிறாரா விஜய்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ