Leo Naa Ready: 'போஸ்டர் அடி... அண்ணன் ரெடி' - தம்பிகளுக்காக வருகிறாரா விஜய்!

Leo Naa Ready Song: லியோ படத்தில் நடிகர் விஜய் பாடிய 'நான் ரெடி' பாடல் இன்று மாலை 6.30 மணியளவில் யூ-ட்யூபில் வெளியானது. இந்த பாடல் குறித்த தகவல்களை இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 22, 2023, 07:19 PM IST
  • இப்பாடலில் புகை, மது குறித்த வரிகள் இடம்பெற்றுள்ளன.
  • கில்லி, கத்தி என விஜய் படங்களை தொடர்புபடுத்தும் வரிகளும் ரசிக்க வைக்கின்றன.
  • அரசியல் பிரவேச கருத்துகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
Leo Naa Ready: 'போஸ்டர் அடி... அண்ணன் ரெடி' - தம்பிகளுக்காக வருகிறாரா விஜய்! title=

Leo Naa Ready Song: நடிகர் விஜய் தனது 49ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவர் கடந்த வாரம் 10, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கிய நிகழ்வில் இருந்தே சினிமா, அரசியல் என அனைத்து வட்டாரங்களிலும் விஜய் குறித்த பேச்சுகள் தான் அலையாடி கொண்டிருக்கின்றன. 

உச்சகட்ட எதிர்பார்ப்பு

அந்த வகையில், அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் நடிப்பில் நடித்து வரும் லியோ படத்தின் முதல் பாடல் அவரது பிறந்தநாளான இன்று வெளியாகும் என அறிவித்திருந்தனர். நான் ரெடி என பெயரிடப்பட்ட அந்த பாடலின் ப்ரோமோவை கடந்த ஜூன் 20ஆம் தேதி வெளியிட்டிருந்த நிலையில் அந்த பாடலின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்தது எனலாம்.

விஷ்ணுவின் வரிகள் வேற லெவல்

விஜய்யின் அரசியல் வருகை சமிக்ஞைகள் கடந்த சில காலமாக அதிகமாகி வரும் நேரத்தில், நான் ரெடி என்ற தலைப்பில் பாடலை வெளியிடுவது பலரின் கவனத்தையும் கவர்ந்தது எனலாம். அதையொட்டி, இந்த பாடல் இன்று மாலை 6.30 மணியளவில் யூ-ட்யூபில் வெளியிடப்பட்டது. இப்பாடலை விஜய் பாடியிருந்த நிலையில், அனிருத் இசையமைத்து பாடியும் உள்ளார். அதில் வரும் ராப் பகுதிகளை அசல் கோளாறு பாடியுள்ளார். தினேஷ் மாஸ்டர் நடன இயக்குநராக பணியாற்றிபாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநரான விஷ்ணு, மாஸ்டர், விக்ரம் படங்களிலும் பல பிரபல பாடல்களை எழுதியவர் ஆவார். 

நான் ரெடி வீடியோ

மேலும் படிக்க | 49வது பிறந்தநாள் கொண்டாடும் விஜய்யைப் பற்றி 49 வெளிவராத உண்மைகள்

அரசியல் வாசனை...

இதனால், பாடல் வரிகளில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த வார்த்தைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. பாட்டு 'தம்பிங்களுக்குகோசம் (தம்பிகளுக்காக) வாண்ணா...' என ஆரம்பிக்க, 'நான் ரெடிதான் வரவா... அண்ணன் நான் தனியா வரவா' என விஜய் பாடுவதாக அமைக்கப்பட்டுள்ளது. அதிலும், ஒரு இடத்தில் 'போஸ்டர் அடி... அண்ணன் ரெடி... கொண்டாடும் கொளுத்தனும்டி...' என அவரின் அரசியல் பிரவேச வாசனை பலமாகவே அடிகிறது. இதுபோன்ற வரிகள் புதிதில்லை என்றாலும், இந்த சூழலில் இது வேறு விதத்தில் அணுகப்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 

மது, சிகரெட் உடலுக்கு கேடு...

மேலும், பாடலின் இடையில் வரும் 'மில்லி உள்ள போனா... கில்லி வெளிய வருவான்' மற்றும் அவரின் கத்தி படத்தை தொடர்புபடுத்தும் வரிகள் என விஜய் ரசிகர்களுக்கான கொண்டாட்ட பாடலாகவும் இது அமைந்துள்ளது. அசால் கோளாறின் ரேப் பகுதியும் அசத்தலாக உள்ளது. மேலும், பாடலை உருவாக்கிய காட்சிகளை இதில் படக்குழு வெளியிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் இதில் இடம்பெற்றிருக்கின்றனர். 

இரண்டாம் லுக் எப்போது?

லியோ படத்தின் First Look விஜய் பிறந்தநாளையொட்டி, இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து, தற்போது லியோ படத்தின் நான் ரெடி பாடல் முதல் பாடலாக வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, படத்தின் இரண்டாம் லுக் இன்றே வெளியாகலாம் என கூறப்படுகிறது. இதற்கு, விஜய் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.  

அக்டோபரில் ரிலீஸ்

விஜய் மட்டுமின்றி திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் என பெரிய நட்சத்திர பட்டாளமே லியோ படத்தில் இணைந்துள்ளது. படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்த அடுத்தடுத்த கட்ட பணிகள் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்படம் வரும் அக். 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ஸ்டிக்கர் அரசியலில் விஜய்... புஸ்ஸி ஆனந்த் செயலால் கொந்தளிப்பு..! என்னப்பா இதெல்லாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News