Actor Karthi Vaa Vaathiyaar Movie : கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். 


இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் படத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.  ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.‌ கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ.  ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.  


மேலும் படிக்க | அஜித்தின் 64வது படத்தை இயக்கப்போவது யார்? போட்டியில் 3 பெரிய இயக்குநர்கள்!



இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கார்த்தியின் தோற்றம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் குறிப்பாக கார்த்தி காக்கி உடையும், கலர் கலரான கண்ணாடியையும் அணிந்து தோன்றுவதும், பின்னணியில் தமிழ் திரையுலகத்தின் சாதனை செய்து, இன்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜாம்பவான் எம்ஜிஆரின் வேடமணிந்து கலைஞர்கள் நிற்பதும்  படத்தை பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.


27 வயது குறைந்த நடிகை..


வா வாத்தியார் படத்தில், நடிகர் கார்த்திக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தெலுங்கு திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் கிருத்தி ஷெட்டிக்கு, இப்படம்  நல்ல ஆரம்பமாக இருக்கும் என நம்பப்படுகிறது. கிருத்தி ஷெட்டிக்கு தற்போதுதான் வயது 20 ஆகிறது. ஆனால் கார்த்திக்காே, வயது 47 ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 



நடிகர் கார்த்திக்கு கடைசி படமான ஜப்பான தோல்வியில் முடிந்தது. இதையொட்டி அவர் தற்போது நடித்து வரும் படங்களாவது வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். 


மேலும் படிக்க | நடிகர் கார்த்தி பிறந்தநாளுக்கு இரத்ததானம் செய்த ரசிகர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ