‘ஸ்டார்’ படத்தில் நடிக்க கவின் வாங்கிய சம்பளம் எவ்வளவு? இவ்ளோ பெரிய அமவுண்டா!
Actor Kavin Salary For Star Tamil Movie : தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருக்கும் ஸ்டார் திரைப்படம். இந்த படத்தில் கவின் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
Actor Kavin Salary For Star Tamil Movie : தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் ஹீரோவாக இருப்பவர், கவின். சின்னத்திரையில் இருந்து தற்போது பெரிய நாயகனாக வளர்ந்து வரும் இவர், சமீப காலமாக ஹிட் படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு ரசிகர்கள் தொடர்ந்து வரவேற்பினை கொடுக்க, தொடர்ந்து நல்ல கதைகளாக செலக்ட் செய்து வருகிறார் கவின்.
ஸ்டார் படத்தில் ஜொலித்தாரா கவின்?
ஸ்டார் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, ரசிகர்களுக்கு இப்படத்தின் மீது அதிகளவில் எதிர்பார்ப்பு எழுந்தது. காரணம், இப்படத்தை ‘ப்யார் பிரேமா காதல்’ படத்தை இயக்கிய இளன் இயக்கியிருந்தார். அது மட்டுமன்றி, தன் கடைசி படமான ‘டாடா’ வெற்றி பெற்றதை தொடர்ந்து கவின் இந்த படத்தில் சைன் செய்தார். இதனாலும் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்தது. ட்ரைலரிலேயே படத்தின் கதை என்ன என்பது காண்பிக்கப்பட்டிருந்தாலும், இதை தியேட்டரில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்தனர்.
படத்தின் கதை, எதை நோக்கி நகர்கிறது என்பது முன்கூட்டியே கணிக்கும் வகையில் இருந்தாலும், கவின் இதில் ஒரு நடிகராக ஜெயித்திருக்கிறார். இதற்கு முன்னர், அவர் நடித்த படங்களில் ஒரு சாதாரண க்ரஷ் மெட்டீரியலாகவும், நார்மலான ஐடி பையனாகவும் நடித்து வந்த இவர், இந்த படத்தின் மூலம் நடிப்பு அசுரனாக மாறியிருக்கிறார். குறிப்பாக இவர் கதறி அழும் காட்சிகள், நம்மையும் சேர்த்து அழ வைக்கிறது.
கவினின் சம்பளம்..
சின்னத்திரையில் இருந்து வந்திருந்தாலும், கவினுக்கு பெரிய வெளிச்சத்தை கொடுத்தது பிக்பாஸ் மேடைதான். பிக்பாஸ் மூன்றாவது சீசன் மூலம் பிரபலமான இவர், அதன் பிறகுதான் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். ஆரம்ப காலங்களில் இவர் ஒரு படத்திற்கு சுமார் ரூ.35 முதல் 40 லட்சம் வரை சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், டாடா படத்தின் வெற்றிக்கு பிறகு, இவர் தனது சம்பளத்தை ஒரே அடியாக உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ஒரே நாளில் ரிலீஸான 3 முக்கிய படங்கள்! முதலில் எதை பார்ப்பது?
ஸ்டார் படத்தில் நடிக்க, இவர் ரூ.2 கோடி சம்பளமாக வாங்கியதாக கூறப்பட்டது. இது குறித்து அவரிடம் சமீபத்தில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ஒரு நடிகரின் தரம் உயரும் போது அவர் சம்பளத்தை உயர்த்துவதில் எந்த தவறும் இல்லை என்று கூறிய அவர், சம்பளம் குறித்த விவரம் படத்தின் தயாரிப்பாளருக்கும் நடிகருக்குமானது என்று கூறினார். மேலும், தன்னிடம் சம்பளத்தை Negotiate செய்து கொள்ளலாம் என்றும் கூறினார். இவருக்கு 2 கோடி சம்பளமாக கொடுக்கப்படாமல் இருந்தாலும், அந்த தொகைக்கு மிக நெருக்கமான ஒரு தொகை கொடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
ஸ்டார் படம் எப்படியிருக்கு?
ஸ்டார் திரைப்படத்தில் ஆங்காங்கே திரைக்கதையில் கொஞ்சம் தொய்வு இருந்தாலும், நேர்த்தியான படத்தொகுப்பால் படம் ஜெயித்திருக்கிறது. முதல் பாதி போனதே தெரியாமல் செல்ல, இரண்டாம் பாதி மட்டும் கொஞ்சம் இழுவையாக இருந்தது. ஆனால் கவின், தனது நடிப்பால் காட்சிக்கு காட்சி உயிர் கொடுத்திருக்கிறார். அவருக்கு தொடர்ந்து இதே போல படங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பாசிடிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ