ராஜமௌலி Vs மணிரத்னம்?... ஆரம்பித்து வைத்த ராம்சரண் வீடியோ; ட்விட்டரில் களேபரம்
பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸாகியிருக்கும் சூழலில் ராஜமௌலியின் வீடியோவை ராம்சரண் பகிர்ந்திருப்பது ட்விட்டரில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் திரைப்படமாக மாற்றியிருக்கிறார். லைகா தயாரிப்பில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பலரும் நடித்திருக்கும் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். கடந்த 30ஆம் தேதி படம் வெளியான்கி ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஏறத்தாழ 70 ஆண்டுகளாக மக்களின் மத்தியில் புழங்கிய கதை என்பதாலும், பலரும் எதிர்பார்த்திருந்ததாலும் குடும்பம் குடும்பமாக திரையரங்குக்கு வந்து படத்தை ரசித்துவருகின்றனர். அதுமட்டுமின்றி நாவலின் கருவை சிதைக்காமல் மணிரத்னம் எதார்த்தமாக படமாக்கியிருப்பதாகவும் பலர் கூறுகின்றனர். ஆனால் நாவல் படிக்காதவர்களுக்கு பொன்னியின் செல்வன் சிறிது ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
சூழல் இப்படி இருக்க பொன்னியின் செல்வனை பாகுபலி படத்தோடு ஒப்பிடும் கூத்தும் நடந்துகொண்டிருக்கிறது. பாகுபலியில் இருந்த பிரமாண்டம் இதில் இல்லை, அதில் இருந்த சண்டைக்காட்சிகள் போல் இதில் இல்லை என பலரும் பாகுபலியையும், பொன்னியின் செல்வனையும் ஒரே தராசில் வைத்துவருகின்றனர். ஆனால், பொன்னியின் செல்வன் வரலாற்று புனைவு, பாகுபலி முழுக்க முழுக்க கற்பனை கதை. இதை எப்படி அதனுடன் ஒப்பிடலாம் என எதிர்வாதமும் வைக்கப்படுகிறது.
பொன்னியின் செல்வன் வெளியான ஒரு நாளில் இந்த ஒப்பீட்டை சில தமிழ் ரசிகர்கள் நிகழ்த்திக்கொண்டிருந்தாலும் தெலுங்கு ரசிகர்கள் முழுவதுமான ஓப்பீட்டில் இறங்கினர். அதுமட்டுமின்றி பொன்னியின் செல்வன் திரைப்படத்தைவிட பாகுபலிதான் பெஸ்ட் எனவும் அவர்கள் சமூக வலைதளங்களில் கூறினர். இதனைக் கண்டு பொறுக்காத தமிழ் ரசிகர்களும் பாகுபலியில் வைக்கப்பட்ட சில காட்சிகளை மேற்கோள் காட்டி தெலுங்கு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்துவந்தனர். மேலும், மணிரத்னத்தைவிட ராஜமௌலி ஒன்றும் சிறந்த இயக்குநர் கிடையாது. அதை ராஜமௌலியே ஒத்துக்கொள்வார் எனவும் கூறினர்.
இந்நிலையில் ராம் சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில், RRR படம் அமெரிக்காவில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டபோது அப்படத்தின் டைட்டில் கார்டுக்கு ரெஸ்பான்ஸ் இடம்பெற்றிருக்கிறது. மேலும் அந்த வீடியோவில் ராஜமௌலியும் இருக்கிறார். அதை பகிர்ந்துள்ள ராம் சரண் ‘One And Only ராஜமௌலி’ என குறிப்பிட்டிருக்கிறார்.
ராம்சரணின் இந்த வீடியோவைப் பார்த்த தமிழ் ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்துவருகின்றனர். மேலும் இதன் மூலம் மணிரத்னத்தைவிட ராஜமௌலிதான் சிறந்த இயக்குநர் என்று ராம்சரண் சொல்ல வருகிறாரா எனவும் கேள்வி எழுப்பிவருகின்றனர். இதனால் ட்விட்டரில் ராஜமௌலி Vs மணிரத்னம் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.
மேலும் படிக்க | பொன்னியின் செல்வன்தான் பாகுபலியைவிட பெஸ்ட்... அடுக்கடுக்கான காரணங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ