ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வெங்கி இயக்கத்தில் சதிஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் Trident Arts R.ரவீந்திரன், தயாரிப்பாளர் Seven Screen Studio லலித், தயாரிப்பாளர் Escape Artists மதன், PVR சினிமாஸ் மீனா, டாக்டர் நிஷா, Advocate தமோதர கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  அருள்நிதி நடிப்பில் வெளியான தேஜாவு மற்றும் நவீன் சந்திரா நடிப்பில் வெளியான ரிபீட் (தெலுங்கு) வெற்றி படங்களுக்கு பிறகு வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிக்கும் படம் இது. பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் வெங்கி என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 2023இல் வெளியான மற்றும் வெளியாகவிருக்கும் தமிழ் திரைப்படங்கள்



"ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் No3" என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சதிஷ் கதாநாயகனாக நடிக்கும் சிம்ரன் குப்தா கதாநாயகியாக நடிக்கின்றார். உடன் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.  யுவா ஒளிப்பதிவை மேற்கொள்ள, VBR இசையமைக்கிறார்.  இணை தயாரிப்பாளராக முரளி கிருஷ்ணன் பணியாற்றுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.



சதீஸ் நாய் சேகர் படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார்.  ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்த இந்த படம் அவர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்து இருந்தது.  இந்நிலையில் தன்னுடைய இரண்டாவது படத்தில் நடிக்க உள்ளார்.  ஒருபுறம் கதையின் ஹீரோவாக நடித்தாலும், மறுபுறம் காமெடி கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.  சமீபத்தில் வெளியான வாரிசு படத்திலும் சதீஸ் நடித்து இருந்தார்.  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் லலித்திடம் தளபதி 67 படம் குறித்து கேட்கப்பட்டது.  அதற்கு விரைவில் படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று தெரிவித்து இருந்தார்.  


மேலும் படிக்க | விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ