2023இல் வெளியான மற்றும் வெளியாகவிருக்கும் தமிழ் திரைப்படங்கள்

UpeomingTamil movies: பொங்கல் மற்றும் புத்தாண்டில் வெளியாக இருக்கும் தமிழ் திரைப்படங்களின் பட்டியல்... 2023இல் வெளியான மற்றும் வெளியாகவிருக்கும் தமிழ் திரைப்படங்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 16, 2023, 03:23 PM IST
  • பொங்கல் ரிலீஸ் திரைப்படங்கள் மாஸ்]
  • புத்தாண்டில் வெளியாக இருக்கும் தமிழ் திரைப்படங்களின் பட்டியல்
  • இந்தியன் இரண்டாம் பாகம் எப்போது ரிலீஸ்?
2023இல் வெளியான மற்றும் வெளியாகவிருக்கும் தமிழ் திரைப்படங்கள் title=

Latest Tamil movies: புத்தாண்டு பிறந்தவுடன் ஜனவரி மாதத்தில் வெளியான திரைப்படங்களி,ல் துணிவு மற்றும் வாரிசு மாஸ் காட்டின.  இவற்றைத் தவிர ஜனவரி மாதம் ரிலீஸ் திரைப்படங்கள் பட்டியலில்,  பதான், பிகினிங், ஃபர்ஹானா, டாட்டா, நரகாசூரன் ஆகியவை எதிர்ப்பார்ப்பை எகிற வைத்திருக்கும் திரைப்படங்கள் ஆகும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகவிருக்கும் தமிழ்த் திரைபடங்களில் தலைக்கூத்தல், பொம்மை நாயகி, வசந்த முல்லை, வாத்தி, நூறு கோடி வானவில், மாயவன் 2 (மாயவன் -ரீலோடர்) அகிலன், பார்டர், இடம் பொருள் ஏவல், பகாசூரன், காசேதான் கடவுளடா, டைட்டானிக் காதலும் கவுந்து போகும், ஏஞ்சலினா, ஆக்கோ என பல படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அதோடு, புத்தாண்டு பிறந்தவுடன் ஜனவரி மாதத்தில் வெளியான திரைப்படங்களில், துணிவு மற்றும் வாரிசு மாஸ் காட்டின.  இவற்றைத் தவிர ஜனவரி மாதம் ரிலீஸ் திரைப்படங்கள் பட்டியலில்,  பதான், பிகினிங், ஃபர்ஹானா, டாட்டா, நரகாசூரன் உட்பட பல படங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகவிருக்கும் தமிழ்த் திரைபடங்களில் தலைக்கூத்தல், பொம்மை நாயகி, வசந்த முல்லை, வாத்தி, நூறு கோடி வானவில், மாயவன் 2 (மாயவன் -ரீலோடர்) அகிலன், பார்டர், இடம் பொருள் ஏவல், பகாசூரன், காசேதான் கடவுளடா, டைட்டானிக் காதலும் கவுந்து போகும், ஏஞ்சலினா, ஆக்கோ என பல படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!

பொங்கல் வாரத்தில் வெளியாகியுள்ள 'வாரிசு' படம் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக மாறி இருக்கிறது, ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து கொண்டிருந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.  அஜித்தின் 'துணிவு' படத்தோடு மோதும் வகையில் விஜய்யின் 'வாரிசு' படம் வெளியிடப்பட்டது. 

இருப்பினும் தமிழகத்தில் 'துணிவு' படத்தை காட்டிலும் 'வாரிசு' படத்தின் முதல் நாள் கலெக்ஷன் குறைந்த அளவில் தான் இருந்தது குறிப்பிடத்தக்கது.  பக்கா குடும்ப கதையம்சத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தில் பல திரை பிரபலங்கள் நடித்து இருக்கின்றனர்.  

விக்ரம்- கௌளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் முதன்முறையாக உருவாகி வரும் திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தின், போஸ்டர்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்த நிலையில், பொங்கல் பண்டிகை  அன்று இப்படத்தின் டீசர் ரீலீஸாகியது. சால்ட் & பெப்பரில் ஹேர் ஸ்டைலில் விக்ரம் கலக்கலாக இருக்கிறார். புலனாய்வு, துப்பு துலக்குவது என்பதன் பின்னணியில் அமைந்துள்ள இந்த திரைபப்டத்திற்கு  ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். டீசர் அனைவரையும் கவர்ந்துள்ளது.

மேலும் படிக்க | வாரிசு படத்தில் குஷ்பூவின் காட்சிகள் நீக்கப்பட்டதற்கு இதுதான் உண்மையான காரணமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News