பாக்யராஜ் நீக்கம்... ட்விட்டரில் சண்டையை ஆரம்பித்த சாந்தனு
நடிகர் சங்கத்திலிருந்து பாக்யராஜ் நீக்கப்பட்டதை அடுத்து அவரது மகன் சாந்தனு ட்வீட் செய்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த மார்ச் 20ஆம் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில், தலைவராக நாசரும், பொதுச்செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாண்டவர் அணி சார்பாக துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியோரும் வெற்றி பெற்றனர். தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர்கள் ஆகிய 5 பதவிகளையும் பாண்டவர் அணியே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட சூழலில், நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் செயல்பட்டதாக பாக்யராஜ் மீது புகார் கூறப்பட்டது. இது குறித்து செயற்குழு முடிவெடுத்து சங்க உறுப்பினர் பதவியில் இருந்து உங்களை ஏன் நீக்கக்கூடாது என 15 நாள்களுக்குள் விளக்கமளிக்க வேண்டுமென்று நோட்டீஸும் அனுப்பியது. இதேபோல் நடிகர் உதயாவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனையடுத்து நடிகர் சங்க விதி 13ன்படி பாக்யராஜும், நடிகர் உதயாவும் நீக்கப்பட்டிருக்கின்றனர். பாக்யராஜ் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பாக்யராஜின் மகனும், நடிகருமான சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில், “எவ்வளவு கீழ இறங்க முடியுமோ அவ்வளவு இறங்கி பாக்குறீங்க … திருத்த முடியாது” என பதிவிட்டிருக்கிறார். அவரது இந்தப் பதிவின் மூலம் பாக்யராஜை நீக்கிய நாசர், விஷால், கார்த்தியை மறைமுகமாக சாடியிருக்கிறார் என்கின்றனர் நெட்டிசன்ஸ்.
முன்னதாக, தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன. அப்போது வாக்குரிமை மறுக்கப்பட்டதாக கூறி, தேர்தலை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டடது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி கல்யாணசுந்தரம், பதவிக்காலம் முடிந்த பிறகு தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டதால், அவரால் நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது எனவும், வாக்கு எண்ணிக்கையை நடத்தக்கூடாது எனவும் உத்தரவிட்டது.
இதையடுத்து பாண்டவர் அணியின் நாசர், விஷால், கார்த்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் புஷ்பா, சத்தியநாராயணா, முகமது ஷபீர் ஆகியோர் அமர்வுக்கு விசாரணைக்கு வந்த நிலையில், கடந்த மாதம் இந்த தேர்தல் செல்லும் என்றும் வாக்கு எண்ணிக்கை நடத்தலாம் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata