கோவை ப்ரோட்வே மாலில் திரையிடப்பட்டுள்ள டக்கர் திரைப்படத்தை அப்படத்தின் கதாநாயகர் நடிகர் சித்தார்த் கண்டு கழித்தார். இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சித்தார்த், டக்கர் திரைப்படம் பொழுதுபோக்காக ஜாலியா பாப்ப் கார்ன் சாப்பிட்டு கொண்டே பார்ப்பதற்கான படம் எனவும் 2k கிட்ஸ்க்கு பிடித்தமான கமர்சியல் படம் எனவும் தெரிவித்தார். மேலும் நான் முதல்முறையாக ஆக்சன் செய்திருக்கிறேன் எனவும் கூறினார்.  என்னைப் பொறுத்தவரை யாரெல்லாம் இளமையாக நினைக்கிறார்களோ அவர்கள் அனைவரும் இளைஞர்கள் தான், கோவையை சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் நண்பர்களுடன் திரையரங்குகளுக்கு வந்து திரைப்படத்தை பாருங்கள் என கேட்டுக்கொண்டார். இத்திரைப்படம் திரையரங்கில் கரகோஷத்துடன், சிரிப்புடன் படத்தை ரசித்து பார்க்கின்றனர்.  யோகிபாபு தான் அதிக சம்பளம் வாங்கி கொண்டு சிரிக்க வைக்கும் நடிகர். மக்களை சிரிக்கவைப்பத்து மிகவும் கடினம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நயன் - விக்கியை துரத்திய நான்கு பிரச்சனைகள்! சோதனை காலம் என பதிவிட்ட விக்கி



பொதுமக்கள் பொழுதுபோக்கு படங்கள் ரசித்தால் நாங்களும் பொழுதுபோக்கு படங்களை எடுக்க வசதியாக இருக்கும் என்றார். காதல் படங்களில் இது ஒரு வித்தியாசமான காதல் படம் எனவும் கூறினார்.  அடுத்ததடுத்து ஆக்சனுக்கு செல்வது பார்வையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் கையில் தான் உள்ளது.  பாய்ஸ் திரைப்படம் வெளியாகி இருபது ஆண்டுகள் ஆகியுள்ளது. 20 ஆண்டுகள் என்பதை 2.0 ஆக எடுத்துக்கொள்கிறேன் எனவும் கூறினார்.  பேன் இந்தியா படமாக மட்டும் அல்லாமல், பேன் வேர்லட் ஆக படம் பார்க்கபட வேண்டும் எனவும் கூறினார்.  மேலும் தான் தற்போது "இந்தியன்-2 வில் நடித்து கொண்டிருக்கிறேன்" எனவும் தெரிவித்தார். இசைக்கு அனைத்து படங்களிலும் எப்பவும் முக்கியத்துவம் கொடுப்பேன் என்றார். அரசியல் விமர்சனங்கள் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த நடிகர் சித்தார்த் எங்கே என்ன பேச வேண்டும் என எனக்கு தெரியும், அதை அங்கே பேசிக்கிறேன் என்றார்.



இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசன் தந்தை மகன் இரண்டு வேடங்களில் இப்படத்தில் கலக்கியிருந்தார். கவுண்டமனி, செந்தில், கஸ்தூரி, மனிஷா கொய்ராலா, சுகன்யா ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகமான இந்தியான்-2 படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த படத்திலும் தாத்தா கமலே ஹீரோ. மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோரும் இந்த படத்தில் கமலுடன் நடித்துள்ளனர். ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார்.  இந்தியன் 2 திரைப்படம், உலகின் பல்வேறு பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. பீகார், தென் ஆப்ரிக்கா, தைவான் உள்ளிட்ட இடங்களில் நடைப்பெற்ற படப்பிடிப்பானது தற்போது சென்னையில் நடைப்பெற்று வருகிறது.  


மேலும் எஸ்.ஜே.சூர்யா இந்தியன் 2 படத்தில் வில்லனாக நடித்துவருவதாக பேச்சு அடிபடுகிறது. எஸ்.ஜே.சூர்யா சமீபத்தில் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில், அடுத்து நடிக்கவுள்ள படம் குறித்து கேட்கப்பட்டது. அவர், தான் நடித்துள்ள படங்களையெல்லாம் கூறிவிட்டு, “ஒரு பெரிய படத்தில் வில்லனாக நடிக்கிறேன்” என்று சொன்னார். அவர் நடிப்பதாக கூறிய படங்கள் எல்லாமே பெரிய படங்கள். ஆனால் அவரது லிஸ்டில் இல்லாத பெரிய படம், இந்தியன் 2 தான். இதனால்தான் இவர் இந்தியன் 2 படத்தின் வில்லன் என்று பல நெட்டிசன்கள் தகவல்களை இணையத்தில் பரப்பி வருகின்றனர். ஒரு சிலர், இந்த கதாப்பாத்திரத்தை படக்குழுவினர் சர்ப்ரைஸாக வைத்திருந்ததாகவும் அதை எஸ்.ஜே.சூர்யா உடைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | மே மாதத்தில் மட்டும் OTTயில் ஜியோ சினிமா செய்த சரித்திர சாதனை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ