தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் சிம்பு. லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட சிம்பு, நடிகர் மட்டுமின்றி இயக்கம், பாடல் எழுதுவது, பாடல் பாடுவது என பல துறைகளில் சிறந்து விளங்குபவர். தொடர்ந்து நடித்துவந்த அவர் சில வருடங்களுக்கு முன்னர் நடிப்பிலிருந்து ஒதுங்கினார். ஆனாலும் அவருக்கான ரசிகர் பட்டாளம் குறையவில்லை. நீண்ட இடைவேளைக்கு பிறகு மணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம், சுசீந்திரனின் ஈஸ்வரன் ஆகிய படங்கள் மூலம் சிம்பு மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தாலும் அந்தப் படங்கள் போதிய வரவேற்பைப் பெறவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தச் சூழலில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். இந்தப் படம் மாபெரும் வெற்றியடைந்து 100 கோடி ரூபாயை வசூல் செய்தது. இந்தப் படம் சிம்புவுக்கு கம்பேக் படமாகவும் அமைந்தது. இதனையடுத்து அவர் பத்து தல, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.



இந்நிலையில், பன்னாட்டு மதுபான நிறுவனம் ஒன்று தங்கள் விளம்பரத்தில் நடிக்க சிம்புவை அணுகியுள்ளது. இதற்காக பெரிய தொகையை ஊதியமாக தர முன் வந்தும் சிம்பு இந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சிம்புவின் ரசிகர்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


 



சிம்பு நடித்திருக்கும் வெந்து தணிந்தது காடு படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை கௌதம் மேனன் இயக்க; ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். 


மேலும் படிக்க | ஷங்கர் சார் மன்னிச்சிடுங்க... அதிதி எனக்கு தங்கச்சிங்க - பல்டி அடித்த கூல் சுரேஷ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ