நடிகர் சிம்பு - நிதி அகர்வால் விரைவில் திருமணம்?
`ஈஸ்வரன்` படத்தில் நடித்ததன் மூலம் சிம்புவுக்கும், நிதி அகர்வாலுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றது.
ஜெயம் ரவியுடன் 'பூமி' படத்திலும், சிம்புவுடன் 'ஈஸ்வரன்' படத்திலும் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்குள் நுழைந்தவர் நடிகை நிதி அகர்வால். தனது ஒரு சில படங்களின் மூலம் ரசிகர் பட்டாளத்தை ஈர்த்து வைத்திருக்கும் நடிகைகளில் நிதி அகர்வாலும் ஒருவர். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவிடும் போட்டோக்களுக்கு என்றே ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இவருக்கும், சிம்புவிற்கு (simbu) இடையே காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் தீயாய் பரவி வருகிறது. இவர்கள் இருவரும் ஈஸ்வரன் படத்தில் ஒன்றாக நடித்து வந்த நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே இவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டு இருக்கிறது என்று கூறப்படுகிறது.
காதல் மலர்ந்தது மட்டுமல்லாமல், தற்போது சிம்புவின் வீட்டிலேயே, நிதி அகர்வால் குடிபெயர்ந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் உள்ளார்களா என்ற சந்தேகமும் ரசிகர்களிடையே எழுந்து வருகிறது. ஏற்கனவே நிதி அகர்வால் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுலை காதலித்து வந்தார், ஆனால் சில மனக்கசப்புகளால் இவர்களுக்குள் பிரேக் அப் ஆகிவிட்டது.
அதேபோல ஏற்கனவே சிம்பு 'வல்லவன்' படத்தில் நயன்தாராவுடன் நடிக்கையில் இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆனால் சில ஆண்டுகளே நீடித்த இவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டு பிரேக் அப் ஆனது. அதனை தொடர்ந்து சிம்பு , ஹன்சிகாவுடன் சில நாட்கள் உறவில் இருந்தார். ஆனால் சிம்புவிற்கு இந்த காதலும் கைகூடவில்லை. இவ்வாறு இரண்டு காதல் தோல்விகளை கடந்த சிம்புவிற்கு நிதி அகர்வாலுடனான உறவாவது நீடிக்குமா அல்லது முதல் இரண்டு காதலை போல இதுவும் தோல்வியை தழுவி விடுமா என்று ரசிகர்கள் குழப்பத்துடன் உள்ளனர்.
ALSO READ | டிசம்பர்-31 அன்று வெளியாகும் 14 படங்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR