சிம்புவின் ஈஸ்வரன் பட டீசர் ரிலீஸ் ஆனது: மகிழ்ச்சியில் ரசிகர்கள்
தீபாவளியான இன்று அதிகாலை 4:32 மணிக்கு சுப வேளையில் சிம்பு தனது படத்தின் டீசரை வெளியிட்டார்.
நீண்ட காலத்திற்குப் பிறகு, நடிகர் சிம்புவின் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் டீசர் ரிலீஸ் ஆகிவிட்டது. ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டரில் தங்கள் நட்சத்திரத்தைப் பார்த்து அவரது ரசிகர்கள் ஏற்கனவே உற்சாகமாகியுள்ளனர்.
தீபாவளியான (Diwali) இன்று அதிகாலை 4:32 மணிக்கு சுப வேளையில் சிம்பு தனது படத்தின் டீசரை வெளியிட்டார். பல நாட்களுக்குப் பிறகு மிகக் குறுகிய காலத்தில் ஒரு படத்தை சிம்பு முடித்துக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் படத்தில், நடிகை நந்திதா ஸ்வேதா மற்றும் பாலா சரவணன் ஆகியோர் முக்கிய துணை வேடங்களில் நடித்துள்ளனர். எஸ்.தமன் இசையமைத்துள்ளார். இவர் ஓஸ்தி மற்றும் வாலுவுக்குப் பிறகு மூன்றாவது முறையாக சிம்புவுக்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை எஸ் திருநாவுகரசும், எடிட்டிங்கை அந்தோணியு இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.
ஈஸ்வரன் படம் முடிந்ததும் சிம்பு (Actor Simbu) ‘மாநாடு’ படத்தில் நடித்து முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பு தனது ரீ-எண்ட்ரியில் சுமார் 20 கிலோவை இழந்து ஃபிட்டாக காணப்படுகிறார்.
ALSO READ: ரொமான்ஸ் மூடில் விக்னேஷ் சிவன்-நயன்தாரா... இணையத்தை அலரவிடும் புகைப்படம்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR