பத்திரிகையாளர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ஜெய்பீம். 1993ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் ராசாக்கண்ணு என்பவரை காவல் துறையினர் காவல் நிலையத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்டையாக கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படத்துக்கு ரசிகர்கள் தங்களது பெரும் ஆதரவை அளித்தனர். படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.



இந்நிலையில் ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேலுவுடன் சூர்யா மீண்டும் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவுக்காக கதை ஒன்றை ஞானவேலு தயார் செய்துவிட்டதாகவும், அந்த கதையை கேட்ட சூர்யாவும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | அருள்நிதிதான் காரணம்! விக்ரம் பட இயக்குனரின் பேச்சு!


ஜெய் பீம் போல இந்தப் படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகவிருப்பதாகவும், அந்தச் சம்பவமும் நிச்சயம் தமிழ்நாட்டை உலுக்கியதாகவே இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


முன்னதாக சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் மீனவர் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் கமிட்டாகியுள்ளார். 



ஆனால் , நீண்ட நாள்களாக உருவாகிவரும் விடுதலை படத்தின் ஷூட்டிங்கை முடிக்கும் வேலைகளில் வெற்றிமாறன் விறுவிறுப்பாக இறங்கியிருக்கிறார். இதற்காக திண்டுக்கல் அருகே கிராம செட் ஒன்றும் போடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | விக்ரம் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா... விருந்து வைத்திருப்பாரா லோகேஷ் கனகராஜ்?


எனவே விடுதலை பட வேலைகளை முடித்துவிட்டே வாடிவாசலை வெற்றிமாறன் தொடங்குவார் என்பதால் அதற்கு முன்னதாகவே சூர்யா - ஞானவேலு இணையும் படத்தின் வேலைகள் ஆரம்பமாகும் என கோலிவுட்டில் பேசப்படுகிறது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR