நடிகர் விஜய்க்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பட வியாபார ரீதியாகவும் வசூல் சக்கரவர்த்தியாகத் திகழும் விஜய் இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்யும் நடிகர்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கலவையான விமர்சனங்களைப் பெறுகிற அவரது படங்கள்கூட கோடிக்கணக்கில் வசூல் ஆகின்றன. அண்மையில் வெளிவந்த பீஸ்ட் படமும்கூட இதற்குச் சாட்சி. குழந்தைகள் முதல் பெரியவர் வரை என ஃபேமிலி ஆடியன்ஸ் விஜய்க்கு அதிகமாக உள்ளதால் இந்த சாதனை தொடர்வதாகக் கூறப்படுகிறது. தியேட்டர் அட்வான்ஸ் புக்கிங், சாட்டிலைட் உரிமம், ரிலீஸுக்கு முன்பான விநியோகம், ஆடியோ உரிமம், ஓடிடி உரிமம் என அனைத்திலும் விஜய்க்கான மவுசு தொடர்ந்து பெருகி வருகிறது.


 


                                     


இந்நிலையில், பிரபல சினிமா தயாரிப்பாளரான அபிராமி ராமநாதன் நடிகர் விஜய் பற்றித் தற்போது கூறியுள்ள கருத்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது விஜய் பற்றிப் பேசியுள்ள அவர், விஜய்க்குத் தனது உழைப்பின் மேல் நம்பிக்கை உள்ளதாகவும், அவரது சில சுமாரான படங்களையும் கூட மக்கள் ரசிக்கிறார்கள் எனக் கூறியுள்ளார். எம்.ஜி.ஆரைப்போல விஜய்க்கும் அனைத்துப் பாடல்களும் ஹிட் அடிக்கும் ராசி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


இந்தப் பேச்சில் அடுத்தாக அவர் உதிர்த்துள்ள விஷயம்தான் இணையத்தில் தற்போது ட்ரெண்டிங் ஆகிவருகிறது. அது என்னவென்றால், நடிகர் விஜய்க்கு ஆஸ்கரே வாங்கக்கூடிய அளவுக்கு திறமை உள்ளதாகப் புகழ்ந்துள்ளார் அபிராமி ராமநாதன்.


மேலும் படிக்க | திடீரென ட்ரெண்டாகும் ஷாருக்கானின் மும்பை இல்லம்- காரணம் இதுதான்!


                                              


ஆனால் ஆஸ்கர் விருது கொடுப்பதில் சிக்கல் இருப்பதாக விளக்கம் அளித்துள்ள அவர், ஒரே ஒரு வெளிநாட்டு படத்துக்குத்தான் ஆஸ்கர் கொடுப்பார்கள் எனவும் நடிகர் விஜய்க்கு ஆஸ்கர் கிடைக்கும் பட்சத்தில் அது தமிழ் சினிமாவுக்கே பெருமைதான் எனவும் கூறியுள்ளார்.


தமிழ் சினிமாவிலிருந்து பல படங்கள் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டாலும் இதுவரை எந்தத் தமிழ் நடிகரும் நடிப்புக்காக ஆஸ்கர் வென்றதில்லை. இந்நிலையில் நடிகர் விஜய்க்கு ஆஸ்கர் வாங்கும் அளவு திறமை உள்ளதாக அபிராமி ராமநாதன் கூறியதை விஜய் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.


மேலும் படிக்க | ரஜினியின் இடத்தில் விஜய்- பின்னணியில் கமல்ஹாசன்?! கசிந்த புதிய தகவல் இதோ!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR