திடீரென ட்ரெண்டாகும் ஷாருக்கானின் மும்பை இல்லம்- காரணம் இதுதான்!

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் இல்லம் இணையத்தில் திடீரென ட்ரெண்ட் ஆகிவருகின்றது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 26, 2022, 07:08 PM IST
  • பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் இல்லம் தற்போது ட்ரெண்ட் ஆகிவருகிறது.
  • ஷாருக்கானின் இல்லம் மும்பை பாந்த்ராவில் அமைந்துள்ளது
  • பாந்த்ராவில் அமைந்துள்ள ஷாருக்கான் இல்லத்தில் சில மாற்றங்கள் நடந்துள்ளன.
திடீரென ட்ரெண்டாகும் ஷாருக்கானின் மும்பை இல்லம்- காரணம் இதுதான்! title=

திரைப் பிரபலங்களின் படங்கள் குறித்த அப்டேட் மட்டுமல்ல; அவர்கள் குறித்து வெளியாகும் மற்ற தகவல்களும்கூட ரசிகர்களுக்குத் தீனிதான். 

அந்த வகையில் தற்போது ட்ரெண்ட் ஆகிவருவது- பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் இல்லம். மும்பை பாந்த்ராவில் உள்ள ஷாருக்கான் வீட்டின் கேட் பகுதியில் mannat என எழுதப்பட்ட பெயர்ப்பலகை இடம்பெற்றிருந்தது. இதனைத் தற்போது புதுப்பொலிவுடனும் புதிய தோற்றத்துடனும் மாற்றியுள்ளார்கள். இதுதான் தற்போது ட்ரெண்ட் ஆகிவருகிறது.

                                                                           Shah Rukh Khan House

முன்னதாக கறுப்பு நிறப் பின்னணியில் தங்க நிற எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை இருந்துவந்தது. அது தற்போது இரவிலும் மிளிரும்படி ரேடியம் வேலைப்பாடுகளுடன் புதிதாக மாற்றப்பட்டுள்ளது. சுமார் 25 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பெயர்ப்பலகை, இண்டீரியர் டிசைனரான அவரது மனைவி கவுரிகானின் ஆக்கத்தில் உருவாகியுள்ளதாம்.

மேலும் படிக்க | விஜய்- ஷாருக்கான் கூட்டணியில் புதிய படம்?! - வாய் பிளக்கும் திரையுலகம்!

இந்த புதிய டிசனைப் பார்க்க ஷாருக்கான் வீட்டுக்குப் படையெடுக்கும் ரசிகர்கள் அதனை போட்டோ எடுத்தும் பதிவிட்டுவருகின்றனர். அதே நேரம், பழைய டிசைனையே தொடர்ந்திருக்கலாம் எனவும் அதுதான் மறக்கமுடியாத பல மலரும் நினைவுகளைக் கொண்டிருந்தது எனவும் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 இன்னும் சிலரோ, இதுவரை ஷாருக்கானின் இல்லப் பெயர்ப்பலகை எப்படி எல்லாம் மாற்றப்பட்டுவந்துள்ளது என புகைப்படங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | ‘Face shield’ அணிந்து பந்துவீசிய ரிஷி தவன் - இதுக்குப் பின்னாடி இப்படியொரு கதையா?!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News