4 கார் இருக்கும்போது சைக்கிள்ல போனது ஏன்?- விஜய் பதில்?!
விஜய் கடந்த சில வருடங்களாக தொலைக்காட்சிகளுக்கு நேர்காணல் அளிப்பதில்லை. இந்நிலையில் சுமார் 10 பத்தாண்டுகளுக்கு பிறகு பீஸ்ட் தொடர்பாக தற்போது நேர்காணல் அளித்துள்ளார்.
விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், பல நாடுகளில் தற்போதே புக்கிங்குகள் தொடங்கிவிட்டன. பூஜா ஹெக்டே, செல்வராகவன் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. வழக்கமாக விஜய் படங்களின் டீசர், ட்ரெய்லர்களுக்கு இருக்கும் அதே அளவு வரவேற்பு பீஸ்ட் ட்ரெய்லருக்கும் கிடைத்துள்ளது. யூடியூப்பில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்துவருவதே அதற்கு சாட்சி.
பீஸ்ட்டிலிருந்து இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதன் ஆடியோ ரிலீஸ் விழாவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அண்மைக்காலமாக அவரது படங்களின் ஆடியோ ரிலீஸ் விழாக்களில் விஜய்யின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையாவது வழக்கமாக உள்ளது. தற்போது விஜய்யின் இயக்க நிர்வாகிகள் தேர்தல் களத்திலும் இயங்கிவருவதால் பீஸ்ட் ஆடியோ விழாவுக்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்துவந்தது. அவர் இம்முறை என்ன பேசப்போகிறார் எனப் பலரும் விவாதித்துவந்தனர்.
விழாவுக்காக சென்னையில் ஏற்பாடுகள் நடந்துவருவதாகவும்கூட சொல்லப்பட்டது. ஆனால் ஆடியோ விழா முடிவைத் திடீரெனக் கைவிட்டது படக்குழு. ஆடியோ விழா சர்ச்சையாகும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், கடைசியில் ஆடியோ விழா நடக்காததும்கூட சர்ச்சையானது. அரசியல் அழுத்தம் காரணமாக ஆடியோ விழா நிறுத்தப்பட்டதா எனவும்கூட சிலர் கேள்வி எழுப்பிவந்தனர். இந்நிலையில், பீஸ்ட் தொடர்பாக நடிகர் விஜய் அளித்துள்ள நேர்காணல் அடுத்த வாரம் ஒளிபரப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க| விடாது துரத்தும் Beast Vs KGF2: என்ன சொல்கிறார் நெல்சன்?
சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யின் நேர்காணல் ஒளிபரப்பாக உள்ளதால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஜய், இயக்குநர் நெல்சனுடன் இணைந்து தோன்றும் அந்த நேர்காணல் தொடர்பான ப்ரோமோவும் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகிவருகிறது. அதில், வீட்டில் 4 கார்கள் இருக்கும்போது, சைக்கிளில் சென்றது ஏன் என அவர் விஜய்யிடம் கேள்வி கேட்பதுபோலவும் அமைந்துள்ளது. அந்தக் கேள்விக்கு விஜய் பதில் சொன்னாரா, என்ன பதில் சொன்னார் எனும் விபரங்கள் நேர்காணல் வெளியாகும்போது தெரியவரும். ஒருவேளை அது தேர்தலின்போது விஜய் சைக்கிள் சென்றது தொடர்பான கேள்வியாக இருக்கும் பட்சத்தில், அக்கேள்விக்கு விஜய் அளிக்கும் பதில், அரசியல் வட்டாரத்தில் புதிய புகைச்சலையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது நடிகர் விஜய் தனது இல்லத்திலிருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்தார். அந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆனதோடு மட்டுமல்லாமல் அரசியல் கவனத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ‘பீஸ்ட்’டை இவங்களாம் பாக்கக் கூடாதாம்! - ஏன் தெரியுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR