Maharaja Movie Vijaysethupathi Salary : தமிழ் திரையுலகில் கால் பாதித்த போதிலிருந்து தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து பிரபலமானவர், நடிகர் விஜய் சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தற்போது கடந்த 14 ஆம் தேதி விஜய் சேதுபதியின் 50 வது படமான மகாராஜா படம் திரையரங்கில் வெளியானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஜா திரைப்படம்:
ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவான மகாராஜா படத்தில், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் அவருடன் இந்த படத்தில் மமதா மோகன்தாஸ், நட்டி என்கிற நட்ராஜ், அபிராமி, திவ்ய பாரதி, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு வில்லனாக அறிமுகமான அனுராக் காஷ்யப் இந்த படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்தை ’தி ரூட்’ நிறுவனத்துடன் பேஷன் ஸ்டுடியோஸ் கைக்கோத்து தயாரித்திருத்துள்ளது.


மகாராஜா படத்தின் விமர்சனம்:
இதனிடையே இந்த படம் வெளியான முதல் பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்று வருகிறது. திரை பிரபலங்கள் பலர் இந்த படத்தை பாராட்டி ஆஹா.. ஓஹோ என்று பாராட்டி வருகின்றனர். அதனுடன் படத்தை பார்த்த பொதுமக்களும் படத்தை தூக்கி வைத்து பாராட்டி வருகின்றனர். குறிப்பா படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் விஜய் சேதுபதி அழ வைத்துள்ளார் என மக்கள் கனத்த இதயங்களுடன் தியேட்டரில் இருந்து வெளியேறும் போது கூறினர். அதனுடன் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு கதி கலங்க வைத்துள்ளது என்றும் கூரை வருகின்றனர்.



மேலும் படிக்க | உன்னி முகுந்தன் நடிக்கும் மார்கோ! வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்


மகாராஜா படத்தின் வசூல் நிலவரம்: 
படம் வெளியாகி தற்போது வரை பாசிட்டிவ் விமரசங்களை பெற்று வரும் மகாராஜா திரைப்படம் இந்தியளவில் முதல் நாளில் 5 கோடி ரூபாய் வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் உலகம் முழுவதிலும் மொத்தமாக மகாராஜா திரைப்படம் 7 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


மறுபுறம் இரண்டாம் நாள் வசூல் நிலவரத்தை பொறுத்த வரை, மகாராஜா திரைப்படம் ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ள இப்படம் மாபெரும் வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.


சம்பளம் இவ்வளவா? 
நடிகர் விஜய் சேதுபதி, தற்போது ஒரு படத்திற்கு 20 கோடி வரை சம்பளமாக பெற்று வருவதாக கூறப்படுகிறது. தற்போது மகாராஜா படத்திற்கும் அவர் அந்த சம்பளம்தான் பெற்று இருப்பார் என்று தகவல். எனினும் சமீபத்தில் மகாராஜா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், "இன்னும் நான் பல படத்துக்கு அட்வான்ஸை தவிர வேறு எதுவுமே வாங்காமல் நடித்துக் கொடுத்து வருகிறேன். சம்பளம் கூட சிலர் சரியாக கொடுப்பது இல்லை. ஆனால், தயாரிப்பாளர்கள் ரொம்பவே கஷ்டப்பட்டு படம் எடுப்பதால் அவர்களின் நிலைமையை புரிந்துக் கொண்டு பெரிதாக எதையும் கண்டு கொள்வதில்லை.” எனக் கூறியிருந்தார்.


மேலும் படிக்க | ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய படம்! பிரபல ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கிறார்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ