தமிழ்நாடு அரசுக்கு விஜய் சொன்ன அட்வைஸ்
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது. இதனால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகியுள்ளனர். இந்தச் சூழலில் நெல்சன் திலீப்குமார் விஜய்யை பேட்டி எடுத்தார். அந்தப் பேட்டியில் விஜய் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது. இதனால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகியுள்ளனர். இந்தச் சூழலில் நெல்சன் திலீப்குமார் விஜய்யை பேட்டி எடுத்தார். அந்தப் பேட்டியில் விஜய் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர் சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு துப்பாக்கிச்சூடு தளத்தில் காவலர்கள் செய்த துப்பாக்கிச்சூடு பயிற்சியின்போது குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து தனது வருத்தத்தை பதிவு செய்தார்.
மேலும் பேசிய விஜய், "துப்பாக்கிச்சூடு பயிற்சியின்போது அப்பாவி சிறுவன் உயிரிழந்தான். அதன் பிறகு நடந்த போராட்டங்களை அடுத்து அந்த பயிற்சி தளம் மூடப்பட்டு சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரண தொகை அளித்தது நல்ல விஷயம்தான். இருப்பினும்,இதுபோன்ற பயிற்சி தளங்களை ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைப்பதே சிறந்தது.
மேலும் படிக்க | அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா?- விஜய் சொன்ன பதில் என்ன?
அந்தப் பயிற்சி தளம் அங்கு இல்லாமல் இருந்திருந்தால் ஒரு சிறுவனின் உயிர் கண்டிப்பாக பிரிந்திருக்காது. துப்பாக்கி சுடும்போது எந்த அளவு பாதிப்பு ஏற்படும் என்பதை யோசித்துதான் இதுபோன்ற பயிற்சி தளங்களை அமைக்க வேண்டும்.
அனைத்து விஷயங்களும் நல்லபடியாக சென்றுகொண்டிருக்கின்றன. இதுபோன்ற விஷயங்களில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தினால் மேலும் சிறப்பாக இருக்கும்" என்றார்.
மேலும் படிக்க | தளபதி 66 - தெலுங்கு படமா தமிழ் படமா? விஜய் கொடுத்த அப்டேட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR