நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தீபாவளி அல்லது பொங்கல் வெளியீடாக படத்தை திரையிட முடிவு செய்துள்ள படக்குழு, விறுவிறுப்பாக பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்தப் படத்தை நடித்து முடித்தபிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய் இந்தி படம் ஒன்றில் கேமியோ ரோலில் தோன்ற இருப்பதாகவும் தெரிகிறது. அட்லீ இயக்கத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கான் ‘ஜவான்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்ட திரை பிரபலங்கள் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வாரிசு படத்தின் கதை இது இல்ல பாஸ்! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்!



லேட்டஸ்டாக விஜய் சேதுபதியும் ஜவான் படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் இணைந்துள்ளார். இதனை ஷாரூக்கான் பேட்டி ஒன்றில் உறுதி செய்தார். இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே சூர்யா, நடிகர் கமல்ஹாசனின் விக்ரம், மாதவனின் ‘ராக்கெட்டரி’ உள்ளிட்ட படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து பெரும் புகழை அடைந்த நிலையில் விஜய்யும் அந்த ரூட்டுக்கு மாறியுள்ளார். இயக்குநர் அட்லீ கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஜவான் படத்தில் நடிக்க இருக்கிறாராம்.



அவர் நடிக்கும் காட்சிகள் சென்னையில் படமாக்கப்படுகின்றன. ஏற்கனவே சென்னையில் செப்டம்பர் மாதம் படப்பிடிப்புகளை நடத்த ஜவான் குழு திட்டமிட்டிருக்கிறது. சுமார் 25 நாட்கள் முக்கிய காட்சிகள் சென்னையின் பல்வேறு பகுதிகள் படமாக்கப்பட இருக்கின்றன. அப்போது, ஒரு நாள் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொண்டு தன்னுடைய போர்ஷன் முழுவதையும் நடித்துக் கொடுக்க முடிவு செய்துள்ளாராம். அதற்காக அவருக்கு பேசப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகவில்லை. ஷாருக்கான் மற்றும் அட்லீ மீது இருக்கும் மதிப்பு காரணமாக விஜய் சம்பளம் வாங்காமல் நடித்தாலும் வியப்பு ஒன்றும் இல்லை என சினிமா வட்டாரம் கிசுகிசுக்கிறது.


மேலும் படிக்க | தளபதி - சூப்பர் ஸ்டாருக்கு கதை சொல்லியிருக்கும் ஹரி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR