வாரிசு படத்தின் கதை இது இல்ல பாஸ்! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்!

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் கதை பிரெஞ்சு படத்தின் தழுவல் என இணையத்தில் சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 6, 2022, 10:11 AM IST
  • வாரிசு படத்தின் 4ம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
  • அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.
  • சிறிது நாட்களுக்கு முன்பு இப்படத்தின் கதை இணையத்தில் வெளியானது.
வாரிசு படத்தின் கதை இது இல்ல பாஸ்! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்! title=

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் 'வாரிசு' படத்தின் பணிகளில் பிசியாக இருந்து வருகிறார்.  இப்படத்திற்கு 'தளபதி 66' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு இருந்த நிலையில், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் தலைப்பும், மூன்று விதமான போஸ்டர்களும் வெளியிடப்பட்டது.  தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் முதன்முறையாக விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார், மேலும் இப்படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா, ஸ்ரீகாந்த் மற்றும் யோகி பாபு போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர்.  

மேலும் படிக்க | ஷாருக்கானின் ஜவான் படத்தில் விஜய் சேதுபதி! அதிகாரப்பூர்வ தகவல்!

மேலும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு கேமியோ ரோலில் நடிக்கப்போவதாகவும் சில தகவல்கள் வெளியானது.  இப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கும் நிலையில் இணையத்தில் வாரிசு படத்தின் கதை கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஒரு கோடீஸ்வரரை ஒரு கும்பல் கொன்றுவிடுவதாகவும், அவரது ரகசியமான வளர்ப்பு பையன் தன் தந்தையை கொன்றவர்களை கண்டுபிடிக்க முயன்று என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் என்றும், இறுதியில் சொத்துக்களை அவர்களிடம் இருந்து எப்படி மீட்கிறார் என்பது தான் வாரிசு படத்தின் கதை என்று இணையத்தில் சில தகவல்கள் கசிந்தது.

vivek

இது பிரெஞ்சு மொழியில் வெளியான 'லார்கோ வின்ச்' என்கிற படத்தின் தழுவல் என்றும் கூறப்பட்டது, ஏற்கனவே வம்சி இயக்கத்தில் வெளியான 'தோழா' படமும் ஒரு பிரெஞ்சு மொழி படத்தின் தழுவல் தான் என்பதால் இணையத்தில் கசிந்த இந்த தகவல் நம்பும்படியாக இருந்தது.  'பீஸ்ட்' படம் போல இந்த படமும் அமைந்துவிடுமா என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த வந்த நிலையில் பாடலாசிரியர் விவேக் இதனை மறுக்கும் விதமாக அவரது ட்விட்டர் பக்கத்தில் காமெடியான டெம்ப்லேட் ஒன்றை பதிவிட்டுள்ளார். இது முற்றிலும் தவறாக தகவல் என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார் விவேக். 'வாரிசு' படத்தில் விவேக் தான் பாடல் வரிகளை எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்க | ‘Gay love Story’ எடுப்பது குற்றமா?- ‘RRR’க்கு ஆதரவாகக் கொந்தளித்த பாகுபலி புரொடியூஸர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News