நடிகர் விஜய், இயக்குநர் வம்சி இயக்கிட்டு வர்ற வாரிசு படத்துல இப்போ நடிச்சுக்கிட்டு இருக்காரு. இந்த நிலையில அவர் அடுத்ததாக நடிக்கவுள்ள படங்கள் என்னென்ன அதை யார் யார் டைரக்ட் பண்ணப் போறாங்கங்கிற தகவல் ஒன்னு இப்போ வெளியாகி இருக்கு அதை இப்போ பாக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லோகேஷ் கனகராஜ்



லிஸ்ட்டுல முதலிடத்துல இருக்குறது இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான். விஜய்யோட 64ஆவது படமான மாஸ்டர் படத்தை இயக்குன லோகேஷ் விஜய்யோட 67ஆவது படத்தை இயக்கப்போறது கிட்டத்தட்ட உறுதி ஆகிடுச்சுனே சொல்லலாம். மும்பையை மையமா வச்சு கேங்ஸ்டர் படமா உருவாகவுள்ள இந்தப் படத்துல ஏகப்பட்ட வில்லன்கள் நடிக்கப்போறாங்களாம். பான் இந்தியா படமாக வரவுள்ள இந்தப் படத்துக்காக சில பாலிவுட் டோலிவுட் நடிகர்கள்கிட்டயும் பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்காம். இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா நடிகர் மன்சூர் அலிகானுக்கு இந்தப் படத்துல செமயான ரோல் ஒன்னும் ரெடி பண்ணிருக்காங்களாம். அந்த ரோலுக்காக ரசிகர்கள் மத்தியில இப்பவே ஏகப்பட்ட எதிர்பார்ப்பும் எழுந்திருக்கு.


வெற்றிமாறன்



லிஸ்ட்டுல அடுத்ததா இருக்குறது இயக்குநர் வெற்றிமாறன். வெற்றிமாறனைப் பொறுத்தவரை சூரியை வச்சு விடுதலைங்கிற படத்தை இப்போ இயக்கிட்டு இருக்காரு. அடுத்ததா சூர்யாவை வச்சு வாடிவாசல் படமும் ப்ளான் பண்ணிருக்கார் வெற்றிமாறன். இதுக்கு நடுவுல தனுஷோட வட சென்னை-2  படமும் இந்த லிஸ்ட்டுல இருக்கு. இந்தப் படங்களை எல்லாம் முடிச்ச பிறகுதான் விஜய்யோட படத்தை இயக்கப்போறாராம் வெற்றிமாறன். சந்திரகுமார் எழுதிய லாக்கப் நாவலை வச்சு விசாரணை, பூமணி எழுதின வெக்கை நாவலை வச்சு அசுரன் படத்தை எடுத்த வெற்றிமாறன், சி.சு.செல்லப்பா எழுதின வாடிவாசலை வச்சுதான் வாடிவாசல் படத்தையும் எடுக்கப்போறாரு. அதனால இவரோட இயக்கத்துல விஜய் நடிக்கப்போற படமும் நாவலை மையமா வச்சு எடுக்கப்பட அதிகமான வாய்ப்பு இருக்குனு சொல்லப்படுது.


அட்லி



பட்டியல்ல நெக்ஸ்ட் உள்ள டைரக்டர் அட்லி. தெறி, மெர்சல்,பிகில்னு விஜய்யை வச்சு 3 படம் டைரக்ட் பண்ணிருக்க இவர் இப்போ ஷாருக்கானை வச்சு ஜவான்ங்கிற படத்தை எடுத்துட்டு வர்றாரு. விஜய்யை வச்சு இவர் இயக்கின எல்லா படங்களுமே நல்ல வசூல் குவிச்சதால அட்லி இயக்கத்துல நடிக்க விஜய் தரப்புல இருந்து எப்போதும் தயாரா இருக்குறதாகவே சொல்லப்படுது. பிகில் படத்துல விஜய் நடிச்ச ராயப்பன் ரோலை மட்டும் தனியா எடுத்து ஒரு படம் பண்ணனும்னு ரசிகர்கள் சிலர் அட்லிகிட்ட சோசியல் மீடியாவுல ரெக்வஸ்ட் பண்ணிருந்தாங்க. அட்லியும்கூட அதுக்கு ஓக்கேங்கிற மாதிரி பதில் சொல்லிருந்தாரு. அதனால விஜய்யை வச்சு இவர் இயக்கப்போற படம் ராயப்பன் ரோலை மையமா வச்சா இல்ல வேற ஏதும் தனிப் படமாங்கிறது இனிமேதான் தெரியவரும்.


 ஏ.ஆர்.முருகதாஸ்



இந்த லிஸ்ட்டுல அடுத்ததா உள்ளவர் துப்பாக்கி, கத்தி, சர்கார்னு விஜய்யை வச்சு 3 படம் இயக்கி இருக்குற ஏ.ஆர்.முருகதாஸ்தான். முருகதாஸ் இயக்குன முந்தைய படங்களோட கம்பேர் பண்ணும்போது சினிமா மார்க்கெட்ல அவரோட கிராப் இப்போ கொஞ்சம் இறங்குமுகமா இருக்குனே சொல்லலாம். அதனால ஒரு பெரிய ஹிட் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்துல முருகதாஸ் இருக்காரு. அதனால இவர் திரும்பவும் விஜய்கூட ஒரு படம் இயக்க வாய்ப்பு இருக்குனு சினிமா வட்டாரத்துல இப்போ பேச்சு அடிபட்டுட்டு இருக்கு. அதேபோல தன்னோட 70ஆவது படம்ங்கிற மைல் ஸ்டோனை இதன் மூலம் விஜய் அடையிறதால பெரிய படமா இருந்தா நல்லா இருக்கும்னு விஜய் தரப்பும் எதிர்பார்க்கும்னு நம்பப்படுது. அதனால விஜய்- முருகதாஸ் கூட்டணி மீண்டும் உருவாக அதிக வாய்ப்பு இருக்குனு சினிமா வட்டாரத்துல சொல்லப்படுது.


மேலும் படிக்க | ‘வாரிசு’ படத்தில் விஜய்க்கு இப்படியொரு ரோலா? அதுவும் இதுவரை பண்ணாத கேரக்டர்!


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ