SeePics: இணையத்தை கலக்கும் `சர்கார்` திரைப்பட WorkingStills!
AR முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் `சர்கார்`. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!
AR முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'சர்கார்'. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!
சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் AR முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துவரும் திரைப்படம் சர்கார். இப்படத்தின் First Look போஸ்டர் வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை தினம் ஒன்று என்னும் விதத்தில் 5 நாட்களுக்கு வெளியிடவுள்ளதாக சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது.
அந்த வகையில் தற்போது சர்கார் படத்தின் படபிடிப்பு புகைப்படம்-5 வெளியிட்டுள்ளது. இதன் மூலம் முன்னதாக அறிவிக்கப்பட்ட படி 5 புகைப்படத்தினையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக இத்திரைப்படத்தின் இசை வரும் அக்டோபர் மாதம் 2-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் அறிவிதுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏ.ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.