நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி
நடிகர் விக்ரம்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விக்ரம்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் குரல் நடிகர் ஆவார் நடிகர் விக்ரம் (Actor Vikram). 1990 ஆம் ஆண்டு முதல் சேது, விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி, பிதாமகன், ஐ போன்ற தமிழ் மொழி திரைப்படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.
ALSO READ | WHO: குறைந்த தடுப்பூசி பாதுகாப்பு; சோதனை விகிதங்களே Omicron வேரியண்ட்டுக்கு காரணமா?
இவர் தமிழ்த் திரைப்படத் துறையில் பணி புரிந்த வரையில் 7 பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும் தமிழ் நாடு மாநில விருதும் பெற்றுள்ளார். இவருக்கு மிலான் பல்கலைக்கழகம் 2011 ஆம் ஆண்டு மே மாதம் அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. தனது நடிப்பாற்றல் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் முன்னணி இடம் வகிக்கும் நடிகருள் இவரும் ஒருவர்.
இவர் ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பின் தூதர். சஞ்சீவனி அறக்கட்டளையின் தூதுவராகவும் வித்யா சுதா, என்னும் மாற்றுத் திறன் பள்ளியின் தூதுவராகவும் உள்ளார். காசி கண் நலப்பணியின் வேளையிலும் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். விக்ரம் நிறுவனம் மூலம் பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது நடிகர் விக்ரமுக்கு கொரோனா (Coronavirus) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறி இருந்த அவருக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பது உறுதியானது. இதையடுத்து, வீட்டில் அவர் தன்னை தனிமை படுத்திக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த கொடிய வைரஸ் காரணமாக ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என பலரும் பாதிக்கப்பட்டனர். மேலும் தமிழ் திரையுலகிலும் பல முக்கிய மற்றும் முன்னணி நடிகர், நடிகைகள் பாதிக்கப்பட்டனர். சிலர் இந்த தொற்றின் காரணமாக உயிரையும் இழந்தனர்.
ALSO READ | ஆந்திரா, சண்டிகரில் நுழைந்தது ஓமிக்ரான் தொற்று, அதிகரிக்கும் எண்ணிக்கை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR