அதிகரிக்கும் ஒமிக்ரான் எண்ணிக்கை: மகாராஷ்டிராவில் 7 பேருக்கு தொற்று உறுதி

நோயாளிகளில் மூன்று பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள், 4 பேர் பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சியைச் சேர்ந்தவர்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 10, 2021, 08:50 PM IST
அதிகரிக்கும் ஒமிக்ரான் எண்ணிக்கை: மகாராஷ்டிராவில் 7 பேருக்கு தொற்று உறுதி title=

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 10) 7 பேருக்கு கொரோனா தொற்றின் ஒமிக்ரான் வகை மாறுபாடு இருப்பதாக கண்டறியப்பட்டுள்து என மகாராஷ்டிரா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நோயாளிகளில் மூன்று பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள், 4 பேர் பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சியைச் சேர்ந்தவர்கள்.

இந்த எண்ணிக்கையுடன் ஒமிக்ரான் (Omicron) மாறுபாட்டால் மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. 

மும்பையின் தாராவியில், தான்சானியாவில் இருந்து திரும்பி வந்து இப்போது செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இவர் இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | Omicron அச்சுறுத்தலால் சர்வதேச விமானங்களுக்கான தடை ஜனவரி 31 வரை நீட்டிப்பு 

நோயாளியின் உடல்நிலை குறித்த புதுப்பிப்பை வழங்கிய பிரஹன் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (BMC), அந்த நோயாளிக்கு தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்றும், அவர் இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றும் கூறியது. நோயாளியை அழைத்துச் செல்ல வந்த இருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்றும் குடிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

கோவிட் 19 (COVID-19) எண்ணிக்கையைப் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் வெள்ளிக்கிழமை 695 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 631 பேர் குணமடைந்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 12 இறப்புகள் பதிவாகியுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இப்போது 6,534 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

ALSO READ |  இந்தியாவில் 23 பேருக்கு Omicron தொற்று! அதிகரிக்கும் அச்சம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News