3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் விக்ரம் படம்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கப்போகும் `சியான் 61` படம் 3டி தொழிநுட்பத்தில் உருவாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பா,ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜூலை-15 முதல் தொடங்கப்பட உள்ளதாகவும், படம் பிரமாண்டமாக உருவாக போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பா.ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் பேனரின் கீழ் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார், மேலும் இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மாதவன் அனுப்பிய புகைப்படத்தால் கடுப்பான அவரது மச்சான்
மேலும் படத்தை ஹிந்தியிலும் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டு இருக்கிறது, இந்த படமானது 1800 காலகட்டங்களில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட இருக்கிறது. ஹிந்தியில் படம் வெற்றிபெற பல ஏற்பாடுகள் செய்து வருவதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்து இருக்கிறார். மேலும் கூறுகையில் இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட இருப்பதாகவும், இது ரசிகர்களின் பார்வைக்கு விருந்தளிக்கும் வகையிலும் அமையும் என்று கூறப்பட்டுள்ளது.
'மெட்ராஸ்' படத்தின் பணிகளின் போதே இயக்குனர் பா.ரஞ்சித், விக்ரமிடம் ஒரு படத்திற்கான கதையை கூறியிருக்கிறார். இவர்கள் இருவரும் படத்தில் இணைவதற்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி மற்றும் காலா போன்ற படங்களை அடுத்தடுத்து இயக்கும் வாய்ப்பு இயக்குனர் ரஞ்சித்திற்கு கிடைத்துவிட இவரால் விக்ரமை வைத்து படம் இயக்கமுடியாமல் போனது. தற்போது இந்த கூட்டணி இணைந்துவிட்டது, மேலும் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் மீதமிருக்கும் காட்சிகளை நடித்து முடித்த பின் பா.ரஞ்சித் இயக்கும் 'சியான் 61' படத்தில் விக்ரம் இணைவார் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | புஷ்பா 2 திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR