இந்தி நடிகர் வினோத் கண்ணா காலமானார்!!
பிரபல இந்தி நடிகர் வினோத் கண்ணா (70) புற்றுநோய் காரணத்தால் காலமானார்
இந்தி திரை உலகில் 1968-களில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்தவர் வினோத் கண்ணா. வினோத் கண்ணா 1968-ம் ஆண்டு சுனில் தத் நடித்த மன் கா பிரீத் என்ற திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார்.
1997-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பஞ்சாபின் குர்தாஸ்பூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். அதே தொகுதியிலிருந்து 1999-ம் ஆண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜூலை 2002-ம் ஆண்டில் இந்திய ஆய அமைச்சரவையில் பண்பாடு மற்றும் சுற்றுலா அமைச்சராகப் பணியாற்றினார். ஆறு மாதங்களில் இந்திய வெளிவிவகாரத் துறையில் மாநில அமைச்சராக மாற்றப்பட்டார். 2004-ம் ஆண்டில் மீண்டும் தமது தொகுதியில் வென்ற வினோத் கண்ணா 2009-ம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் தோல்வியைத் தழுவினார்.
இந்தி நடிகர் வினோத் கன்னா சில நாட்களுக்கு முன்னர் திடீர் உடல்நலக்குறைபாடு காரணமாக மும்பை கிர்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இவர் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் புற்றுநோய் பாதிப்பால் இந்தி நடிகர் வினோத் கண்ணா காலமானார்.