நண்பன் உதயநிதி அமைச்சர்...9 வருட கனவு..நெகிழ்ந்து போன நடிகர் விஷால்
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாகவும், இந்த நிகழ்வுக்காக ஒன்பது ஆண்டுகளாக காத்திருந்ததாகவும்துறைக்கு தகுதியானவர் என்று நடிகர் விஷால் புகழாரம்.
திமுக இளைஞர் அணி செயலாளரும், திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் உள்ள உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்றுள்ளார். எனவே தமிழகத்தின் 35 வது அமைச்சராக இன்று பொறுப்பேற்று கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்புக்கு பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் நடிகரும், உதயநிதி ஸ்டாலினின் நண்பருமான விஷால், என்னுடைய நண்பன் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி பெற்றதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகும் தருணத்தை கடந்த 9 ஆண்டுகளாக நேரில் பார்க்கவேண்டும் என்று எனக்கு கனவாக இருந்தது. தற்பொழுது அவர் அமைச்சரானதை பார்க்கும் பொழுது நண்பனாக மகிழ்ச்சி அடைகிறேன். இனிமேல் தான் உதயா என்ற நண்பன், உதயநிதி ஸ்டாலின் என்ற பெயரை அனைத்து இடங்களிலும் பயன்படுத்த போகிறார்.
மேலும் படிக்க | அமைச்சரானதும் உதயநிதி ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு!
முதல்வரின் மகன் என்று, எந்த இடத்திலுமே பெயரை பயன்படுத்தாமல் , எளிமையாக தனது தனிப்பட்ட முறையில், தந்தையின் பெயரை பயன்படுத்தாமல் செயல்பட்டவர். தந்தை மற்றும் மகன் இருவரின் பேரும் இணைந்து உதயநிதி ஸ்டாலின் எனும் நான் என பதவியேற்கும் உதயாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதாக நடிகர் விஷால் தெரிவித்தார்.
எனது நண்பர்கள் வட்டாரத்தில் மற்றொருவர் அமைச்சராவது கண்டு மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்த விஷால், தகுதியானவர்கள் தான் அமைச்சராவார்கள், வாரிசு அரசியல் என்பது மேலோட்டமாக தெரியுமே தவிர, அந்தத் துறைக்கு தகுந்தவர் தான் அமைச்சராக இருப்பார் என்பதால், உதயநிதி ஸ்டாலின் இதற்கு தகுதியானவர் என அமைச்சர் பதவி கொடுத்திருப்பதாக என்பது தான் கருதுகிறேன்.