2015-ல் G.V.பிரகாஷ் நடிப்பில் வெளியான "த்ரிஷா இல்லனா நயன்தாரா" படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக தடம் பதித்தவர் ஆதிக் ரவிச்சந்திரன்.  இதனைத்தொடர்ந்து இவர் சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தினை இயக்கினார்.  அதன்பிறகு பிரபு தேவாவை வைத்து பகீரா படத்தினை இயக்கினார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா Spiderman No Way Home? Movie Review


இதனையடுத்து இவர் விஷாலை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.  இதனை உறுதி செய்யும் விதமாக விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  இப்படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது, ஏற்கனவே இந்த நிறுவனம் விஷாலின் 'எனிமி' படத்தை தயாரித்தது எனபது குறிப்பிடத்தக்கது.


 



விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'எனிமி' படம் நல்ல வரவேற்பை பெற்றது.  மேலும் இவர் ஆனந்தன் இயக்கத்தில் "வீரமே வாகை சூடும்" என்ற படத்தில் நடித்து வருகிறார், துப்பறிவாளன் 2 படத்தினை விஷாலே இயக்கி வருகிறார்.  தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய பிரபுதேவா, அமைரா, ஜனனி ஐயர், ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்த "பஹீரா" படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது.


ALSO READ | 'மண்டேலா' இயக்குனருடன் கூட்டணி சேரும் சிவகார்த்திகேயன்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR