'மண்டேலா' இயக்குனருடன் கூட்டணி சேரும் சிவகார்த்திகேயன்!

'மண்டேலா' திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் புதிய படமொன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 16, 2021, 12:58 PM IST
'மண்டேலா' இயக்குனருடன் கூட்டணி சேரும் சிவகார்த்திகேயன்! title=

யோகி பாபு நடிப்பில் மடோன் அஸ்வின் எழுதி, இயக்கிய நகைச்சுவை கலந்த அரசியல் படமான  "மண்டேலா" நேரடியாக OTT-யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த படத்தில் ஷீலா ராஜ்குமார், கண்ணா ரவி, சங்கிலி முருகன், ஜி. எம். சுந்தர் ஆகியோர் நடித்திருந்தனர்.  தனது முதல் படத்தின் மூலமே நேர்மறையான விமர்சனங்களை பெற்ற இயக்குனர் என்ற பெயரையும் மடோன் அஸ்வினுக்கு இப்படம் பெற்று தந்தது.

ALSO READ | "அன்பறிவு" படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்: Exclusive Update!

இந்நிலையில் இவர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இவர்களது கூட்டணியில் உருவாக போகும் இந்த புதிய படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  'மண்டேலா' படத்தின் வெற்றியை தொடர்ந்து மடோன் அஸ்வின் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாக போகும் இந்த படம் பற்றிய அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

sivakarthikeyan

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டாக்டர்' படம் வெற்றி பெற்றதையடுத்து இவர் படங்களின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  தற்போது சிபி சக்ரவர்த்தி இயக்கும் 'டான்' என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார், இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீசாக உள்ளது.  இதனை தொடர்ந்து  இவர் ரவிக்குமார் இயக்கத்தில் 'அயலான்' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.  மேலும் இயக்குனர் அட்லீயின் உதவியாளரான அசோக் இயக்கும் 'சிங்கபாதை' என்கிற படத்திலும், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ஒரு படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க போவதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | ரிவியூவர் இட்டிஷ் பிரஷாந்தை கிழித்து தொங்கவிட்ட 'முருங்கைக்காய் சிப்ஸ்' இயக்குனர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News