அரசு நினைத்தால் தமிழ் ராக்கர்ஸை முடக்க முடியும்: விஷால்
தமிழக அரசு நினைத்தால் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க முடியும் என்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு நினைத்தால் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க முடியும் என்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், நடிகர் சங்கப் பொதுச் செயலாளருமான விஷால், தமிழக முதல்வரைச் சந்தித்தபிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
இளையராஜாவுக்கு மிகப்பெரிய இசை நிகழ்ச்சி வெற்றிகரமான முறையில் நடைபெற்றது. விழாவுக்கு முழு பாதுகாப்பு வழங்கியதற்காக நன்றி தெரிவிக்க முதல்வரைச் சந்தித்தேன். அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் நடத்தியிருக்க முடியாது. ஜூலை முதல் வாரத்தில் நடிகர் சங்கக் கட்டிடத்தின் திறப்பு விழா இருக்கும். தமிழ் ராக்கர்ஸை தமிழக அரசால் மட்டுமே தடுக்க முடியும். நான் கடவுளாக நம்புகிற தமிழக அரசு நினைத்தால் இது நடக்கும்'' இவ்வாறு விஷால் கூறினார்.